செய்திகள்
கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Jan 22, 2026 - 02:30 PM -

0

கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு  நிறைவு

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (22) பிற்பகல் 2 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. 

 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறும், அந்தப் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்குமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

 

இதனையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான குறித்த வைத்திய அத்தியட்சகரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். 

 

இதன் காரணமாகவே வைத்தியர்கள் தமது போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர். 

 

தற்போது கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர் பராமரிப்பு சேவைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05