சினிமா
தனுஷ் 55 படம் குறித்து வௌியான புதிய அப்டேட்

Jan 22, 2026 - 07:03 PM -

0

தனுஷ் 55 படம் குறித்து வௌியான புதிய அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'இட்லி கடை "தேரே இஸ்க் மெய்ன்" ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 

ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

இந்தப் படத்தைக் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான, பூஜை புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

கோபுரம் பிலிம்ஸ் படத்தை தயாரிப்பதில் இருந்து பட்ஜெட் காரணமாக பின்வாங்கியது. இதனால் தனுஷே தனது தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஸ்டுடியோஸ் மூலமாக படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். 

விரைவில் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், ‘தனுஷ் 55’ படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இத்திரைப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05