சினிமா
திரௌபதி 2 படத்திற்கு தடையா?

Jan 22, 2026 - 07:18 PM -

0

திரௌபதி 2 படத்திற்கு தடையா?

மோகன்.ஜி இயக்கிய திரௌபதி 2 படம் நாளை (23) ரிலீஸ் ஆகிறது. அந்த படத்திற்கு தடை கேட்டு மதுரையை சேர்ந்த மகாமுகி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். 

திருவண்ணாமலை பகுதியில் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னன் வீர வல்லாள தேவன் என்பவரின் வாழ்க்கையை தான் திரௌபதி 2 படமாக எடுத்து இருக்கிறார்கள். 

கள்​ளர் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்பதற்கு ஆவணங்கள் இருக்கும் நிலையில் அவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது போல படத்தில் காட்டப்பட்டு இருக்கிறது. அதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டிருந்தார். 

வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதால் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து இருக்கிறது. 

அதனால் திரௌபதி 2 படம் எந்த சிக்கலும் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05