Jan 22, 2026 - 08:03 PM -
0
அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் லேக் கார்ஜெல்லிகோ நகரில் இனந்தெரியாத நபர் ஒருவர் பெரிய துப்பாக்கியை வைத்து கொண்டு இன்று பிற்பகலில் சுற்றி திரிந்துள்ளார்.
அப்போது அந்நபர், எதிரில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தில், 2 பெண்கள், ஆண் ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர்.
பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தினர். இனந்தெரியாத நபரை கைது செய்வதற்கான பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமும் இதுவரை தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

