சினிமா
ஒஸ்காரில் 'சினர்ஸ்' படத்திற்கு அதிக பரிந்துரைகள்

Jan 22, 2026 - 08:24 PM -

0

ஒஸ்காரில் 'சினர்ஸ்' படத்திற்கு அதிக பரிந்துரைகள்

மைக்கேல் பி. ஜோர்டான் (Michael B. Jordan) நடிப்பில், இனவொதுக்கல் காலத்தை பின்னணியாகக் கொண்ட காட்டேரி திரில்லர் திரைப்படமான 'சினர்ஸ்' (Sinners), இந்த ஆண்டின் அதிகப்படியான அகடமி விருதுப் பரிந்துரைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

இன்று (22) வெளியான இந்தப் பட்டியலில் இப்படம் 16 பரிந்துரைகளை அள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

மார்ச் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒஸ்கார் விருது விழாவில், 'சிறந்த திரைப்படம்' என்ற உயரிய விருதிற்காக இப்படம் போட்டியிடுகிறது. 

போட்டியிடும் பிற திரைப்படங்கள்: One Battle After Another Frankenstein, Hamnet, Marty Supreme, Bugonia, F1, The Secret Agent, Sentimental Value மற்றும் Train Dreams ஆகிய திரைப்படங்களும் சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

'சினர்ஸ்' படத்தில் இரட்டை சகோதரர்களாக நடித்ததற்காக மைக்கேல் பி. ஜோர்டான் சிறந்த நடிகருக்கான பரிந்துரையைப் பெற்றுள்ளார். 

இவருடன் லியோனார்டோ டிகாப்ரியோ (One Battle After Another) மற்றும் திமோதி சாலமே (Marty Supreme) ஆகியோரும் மோதவுள்ளனர். 

ஜெஸ்ஸி பக்லி (Hamnet) மற்றும் கேட் ஹட்சன் (Song Sung Blue) ஆகியோர் சிறந்த நடிகைக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

அகடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பைச் சேர்ந்த சுமார் 10,000 நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் இணைந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். 

வோல்ட் டிஸ்னியின் ABC நிறுவனம் இந்த விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும். 

பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ'பிரையன் (Conan O’Brien) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விழாவைத் தொகுத்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05