செய்திகள்
நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனாவின் ஒத்துழைப்பு

Jan 22, 2026 - 09:38 PM -

0

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனாவின் ஒத்துழைப்பு

சீன - இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

சீனாவும் இலங்கையும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டமாக, நாட்டின் விவசாயத் துறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து உற்பத்தித்திறனை அதிகரிப்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன், நாட்டின் விவசாயத் துறை மற்றும் அது சார்ந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தக்கூடிய விதம் குறித்தும், வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைத்தல் மற்றும் பேரே வாவியைச் சுத்தப்படுத்தும் பணிகளுக்காகச் சீனாவிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. 

வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பெருந்தோட்ட முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஸ்வஜித் கந்தேகம, Guizhou பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Zhang Guozhu , Hubei மாகாண வர்த்தக மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் (Cao Xuan , Wei Ping உள்ளிட்ட குழுவினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05