Jan 23, 2026 - 07:56 AM -
0
உக்ரைன், நேட்டோவில் இணையும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பெப்ரவரியில், அந்நாட்டின் மீது ரஷ்யா இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதாக அறிவித்தது.
இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்தார்.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (.23) நடைபெறுகிறது.
சுவிட்சர்லாந்தில் டிரம்பை சந்தித்த பின்னர் பேசிய உக்ரைன் ஜனாதிபதி போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

