செய்திகள்
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Jan 23, 2026 - 01:22 PM -

0

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 

கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்த நீதவான், மேல் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை கிடைக்கும்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சந்தேகநபரான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு உத்தரவிட்டார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05