செய்திகள்
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 197 மில்லியன் ரூபா இழப்பீடு

Jan 23, 2026 - 11:05 PM -

0

கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 197 மில்லியன் ரூபா இழப்பீடு

கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக, 197 மில்லியன் ரூபாவுக்கும் அதிக இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுக்க தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் 2025 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தூதரகத்தினால் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 197,719,710.36 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதில் 23,641,182.00 ரூபா பணம் தூதரகத்தின் ஊடாக நேரடியாக உரிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஏனைய 174,078,528.36 ரூபா பணம், இலங்கையிலுள்ள குடும்ப உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

விசேடமாக, 2014 ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாமல் இருந்த சில வழக்குகள் தொடர்பான இழப்பீட்டுத் தொகைகளையும் இம்முறை பெற்றுக்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும், கடந்த 2024 ஆம் ஆண்டிலும் இத்தூதரகம் 172 மில்லியன் ரூபாவுக்கும் அதிக இழப்பீட்டுத் தொகையை இலங்கை குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05