உலகம்
இந்தோனேசியா விமானத்தில் மாயமான அனைவரும் சடலங்களாக மீட்பு

Jan 24, 2026 - 06:37 AM -

0

இந்தோனேசியா விமானத்தில் மாயமான அனைவரும் சடலங்களாக மீட்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு கண்காணிப்பு பணிக்காக கடந்த சனிக்கிழமை சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர். 

தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டது. 

இந்நிலையில், தொடர் தேடுதலுக்கு பிறகு விமானம் புலுசராங் மலையில் மோதி விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன்பின் விமானத்தில் இருந்த 10 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, விமான விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05