Jan 24, 2026 - 07:00 AM -
0
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்துடுப்பில் ஈடுபட தீர்மானித்து.
அதன்படி, முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் மிட்செல் செண்ட்னர் 47 ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 44 ஓட்டங்களும் பெற்றனர்.
இதையடுத்து, 209 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 15.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 82 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி 05 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

