Jan 26, 2026 - 03:53 PM -
0
சதாஹரித வனவியல் விருதுகள் 2024-2025 நிகழ்வானது 2026 ஜனவரி 23 அன்று மாலை, மொரட்டுவை ரமாடியா கிரான்ட் ஹோட்டலில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இவ்வாண்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்நிகழ்வில் உச்ச விற்பனைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களை சதாஹரித குழுமம் போற்றிக் கௌரவித்துள்ளது.
மிகவும் முக்கியமான இந்நிகழ்வில் சதாஹரித குழுமத்தின் தலைவர் திரு. சதிஸ் நவரத்ன, பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்துள்ளதுடன், கடந்த கால வெற்றியாளர்கள் மற்றும் மதிப்பிற்குரிய விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
உச்ச விற்பனைப் பெறுபேறுகளை நிலைநாட்டியவர்கள் மற்றும் வணிக வளர்ச்சிக்கு ஆதரவளித்து, நிறுவனம் முன்னேறுவதற்கு வழிகாட்டி, கடின உழைப்பை வெளிப்படுத்தி, ஏனைய பல சாதனைகளை நிலைநாட்டிய விற்பனை ஆளணியினருக்கு இந்நிகழ்வில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதிசிறந்த திறமைகள், ஓயாத அர்ப்பணிப்பு, மற்றும் மகத்துவத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவர்களுடைய மிகச் சிறப்பான பெறுபேறுகள் பிரதிபலிப்பதுடன், ஏனையவர்களுக்கு முன்மாதிரியாகவும் காணப்படுகின்றன. நிலைபேற்றியல் கொண்ட வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவம் மற்றும் பசுமை சார்ந்த முதலீடுகளில் இலங்கையின் முதற்தர நிறுவனமாகத் திகழ்ந்து வரும் சதாஹரித நிறுவனத்தின் கலாச்சாரத்தை வரையறுக்கும் புத்தாக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் உத்வேகத்தை ஒவ்வொரு விருதும் எடுத்துக்காட்டுகின்றன.
சதாஹரித நிறுவனங்கள் குழுமத்தின் தலைவர் திரு. சதிஸ் நவரத்ன அவர்கள் இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“தமது குறிக்கோளை பெறுபேறுகளாக மாற்றிக் காட்டியவர்களுக்கு அங்கீகாரமளிக்கும் ஒரு நாளாக இன்றைய இரவுப்பொழுது மாறியுள்ளது. எமது விற்பனை ஆளணியினர் தமக்கான இலக்குகளை அடைவதுடன் மாத்திரம் ஓய்ந்து விடுவதில்லை, பசுமை முதலீடுகள் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, நிலைபேற்றியல் சார்ந்த வனவியலில் எமது முன்னணி ஸ்தானத்தை வலுப்படுத்தி, ஆண்டுதோறும் எமது நிறுவனத்தின் சிந்தனையும் செயற்பாடுகளும் மென்மேலும் சிறப்பிப்பதற்கு உழைத்து வருகின்றனர். எமது வெற்றியாளர்கள் நிலைநாட்டுகின்ற தராதரங்கள் அனைவரும் தம்மை மேலும் திறம்பட உழைப்பதற்கு ஊக்குவிப்பதுடன், சதாஹரித குழுமத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நாம் எடுத்துச்செல்லவுள்ள நிலையில் அவர்களுடைய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.”
2002 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சதாஹரித குழுமம், தொழில்துறையின் தராதரங்களை மேம்படுத்துவதில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பாக உழைத்துள்ளது. புத்தாக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து, பசுமை சார்ந்த முதலீடுகள் துறையில் முதற்தரத்திலுள்ள நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், இலங்கையில் உச்சத்திலுள்ள நிலைபேற்றியல் சார்ந்த வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவ நிபுணத்துவம் நிறுவனம் என்ற அங்கீகாரத்தையும் சம்பாதித்துள்ளது. இது வரையில் ஒரு மில்லியனுக்கும் மேலான மரங்கள் நாட்டப்பட்டமை, முதலீட்டாளர்களுக்கு அறுவடைப் பலாபலனாக 1.7 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளமை இக்குழுமத்தின் வணிக கட்டமைப்பின் வெற்றியைப் பிரதிபலிக்கின்றன. இதற்கு மேலாக, 2,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அறுவடைப் பலாபலனாக மொத்தமாக 4,196 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை செலுத்தப்பட்டுள்ளது.
நிலைபேற்றியல் சார்ந்த அபிவிருத்தி மற்றும் பொறுப்புணர்வுமிக்க வணிகம் ஆகியவற்றின் உத்வேகத்தை சதாஹரித வனவியல் விருதுகள் நிகழ்வு எடுத்துக்காட்டுவதுடன், நிறுவனம் தனது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு உதவியுள்ள விற்பனை ஆளணியினருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் மேடையாகவும் மாறியுள்ளது. இலங்கைக்கு வெளியிலும் வனவியல் துறையில் முன்னோடி என்ற தனது நன்மதிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் அதன் மூலோபாயத் திட்டங்கள் உள்ளிட்ட எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறையையும் சதாஹரித இந்நிகழ்வில் வெளிப்படுத்தியுள்ளது.
சீரான பலாபலன்களை வழங்குவதில் நிரூபிக்கப்பட்ட கடந்தகால வரலாற்றுடன், இலங்கையில் பசுமை சார்ந்த முதலீடுகள் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கைக்குரிய கூட்டாளர் என்ற தனது ஸ்தானத்தையும் சதாஹரித ஆணித்தரமாக உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை வல்லப்பட்டைகளின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று என்ற அந்தஸ்தையும் இக்குழுமம் சர்வதேசரீதியாக நிலைநாட்டியுள்ளதுடன், “Sior Verde” என்ற வர்த்தகநாமத்துடனான அதன் பிரதான நறுமண தைல தயாரிப்புக்கள் ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு இராச்சியம், மற்றும் கட்டார் உள்ளிட்ட பல நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. உலகில் மிகவும் மதிப்பு மிக்க, மிகவும் ஆடம்பரமான நறுமணத் தைல சேர்க்கைப்பொருளை நிலைபேற்றியல் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க வழங்கி, காடழிவைத் தடுக்க உதவி, வணிகரீதியாக வல்லப்பட்டை மரங்களை வளர்ப்பதற்கான சதாஹரித நிறுவனத்தின் காப்புரிமையைக் கொண்ட நம்பகமான மற்றும் திறன்மிக்க தாவர நோய்த்தடுப்பு தொழில்நுட்பம் மலேசியாவில் பயன்பாட்டில் உள்ளது.
சதாஹரித நிறுவனம் தொடர்பான விபரங்கள்
சதாஹரித பிளான்டேஷன்ஸ் லிமிட்டெட் நிறுவனம் 2002 ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் வனவியல் முகாமைத்துவ நிறுவனமாகக் காணப்படுகின்றது. 50,000 க்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்கள் இவ்வர்த்தகநாமத்தின் தூதுவர்களாக காணப்படுகின்றனர். இலங்கையில் கடந்த 23 ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் மேலான மரங்களை சதாஹரித நாட்டியுள்ளதுடன், உண்மையான பசுமை முதலீட்டை வெளிப்படுத்தியுள்ளது.
சர்வதேசரீதியாக உச்சத்தில் திகழும் வல்லப்பட்டை நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமையை இந்நிறுவனம் கொண்டுள்ளதுடன், Sior Verde Limited U.K. மற்றும் Sadaharitha Plantations Madagascar ஆகிய பெயர்களில் முறையே ஐக்கிய இராச்சியம் மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளில் கணிசமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மிகப் பாரிய பெருந்தோட்டமானது 5,300 ஏக்கரில் மடகஸ்காரில் உள்ளதுடன், ஒட்டுமொத்தமாக சுமார் 9,000 ஏக்கர்களை தனது முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுள்ளது. சமூகப் பொறுப்புணர்வின் மீது அர்ப்பணிப்புடன் உள்ள சதாஹரித, காபன் அடிச்சுவட்டைக் குறைத்து, புவி வெப்பமடைதலுக்கு எதிராக போராடி, எதிர்காலத் தலைமுறைகளுக்காக பசுமையான உலகினைத் தோற்றுவிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையின் வல்லப்பட்டை மற்றும் மடகஸ்காரின் வெனிலா ஆகியவற்றை உபயோகித்து உயர்ரக வர்த்தகநாமத்தில் வாசனைத்தைலங்கள் (perfume) மற்றும் வல்லப்பட்டை தயாரிப்புக்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருவதுடன், மலேசியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் கூட்டாளர்களுடன் மூலோபாய வணிக உறவுமுறைகளை ஸ்தாபித்துள்ளது.
