Jan 27, 2026 - 10:27 AM -
0
பரம்பரை பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றி வந்தவர்களை மக்கள் இன்று ஓரங்கட்டியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
நேற்று (26) மாலை ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
மலையகத்தில் கடந்தகால அரசியல்வாதிகளுக்கு மக்கள் இனி முன்னுரிமை வழங்கப்போவதில்லை எனவும், அவர்களின் அரசியல் பயணம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த வாரங்களில் கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். அதேபோல் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாகவும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என தெரிவித்தார்.
--

