Header Logo

சினிமா
ஜனநாயகன் படத்துக்கு அடுத்த ஆப்பு!

Jan 27, 2026 - 11:05 AM -

0

ஜனநாயகன் படத்துக்கு அடுத்த ஆப்பு!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. 

நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். அப்படத்தோடு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். எச்.வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் உடன் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கெளதம் மேனன், மதன் கெளரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். 

ஜனநாயகன் திரைப்படத்தை ஜனவரி 9 ஆம் திகதி பொங்கல் விருந்தாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததாலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, படத்துக்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அந்த உத்தரவு வந்த சில நிமிடங்களிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் சென்சார் போர்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தார். இதனிடையே ஜனவரி 27 ஆம் திகதி ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு என்ன தீர்ப்பு கிடைக்கும் என்கிறா எதிர்பார்ப்பில் ரசிகர்களும், படக்குழுவினரும் இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஜனநாயகன் சென்சார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேபோல் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வதற்கான அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title