Jan 27, 2026 - 11:12 AM -
0
இலங்கையின் PVC உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாகத் திகழும் Anton நிறுவனம், தமது குடிநீர் குழாய் உற்பத்திகளுக்கு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட NSF/ANSI/CAN 61 ஈயமற்ற (Lead-free) சான்றிதழைப் பெற்றுள்ளதனை பெருமையுடன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் National Sanitation Foundation (NSF) வழங்கிய இத்தகைய சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது நிறுவனம் இதுவாகும். பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், உயர்தரப் பாதுகாப்பு மற்றும் சூழல் தொடர்பான நலனைப் பேணுவதற்கும் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த முக்கிய மைல்கல்லானது உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்காவின் மிச்சிகன் (Ann Arbor, Michigan) நகரைத் தளமாகக் கொண்ட NSF அமைப்பானது, உணவு மற்றும் நீர் சார்ந்த நுகர்வோர் உற்பத்திகள் மீது கடுமையான பாதுகாப்பு மற்றும் தரத்தை பூர்த்தி செய்வதையும், அவற்றை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்து, அவற்றைச் சோதித்து சான்றளிக்கும் ஒரு உலகளாவிய பொதுச் சுகாதார அமைப்பாகும். NSF ஆனது, அமெரிக்க தேசிய தரநிலை நிறுவனம் மற்றும் கனடாவின் தரநிலைகள் கவுன்சிலால் அங்கீகாரம் பெற்றது என்பததோடு, இது சர்வதேச பொதுச் சுகாதார தரநிலைகளை அமைப்பதிலும் நிலைநிறுத்துவதிலும் அதன் நம்பகத்தன்மையையும் அதிகாரத்தையும் வலுப்படுத்துகிறது.
உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரம் மற்றும் சூழலுக்கு உகந்த தரநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பான மற்றும் மிகவும் தரமான கட்டுமானப் பொருட்களை வழங்குதல், எனும் Anton நிறுவனத்தின் முன்னுதாரணமான அணுகுமுறையை NSF/ANSI/CAN 61 சான்றிதழ் எடுத்துக்காட்டுகிறது. சந்தையில் கிடைக்கும் சில குழாய்கள் குடிநீரை வழங்குவதில் பாதுகாப்பற்ற மற்றும் நீண்டகால அடிப்படையில் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய ஈயக் கலவைகளை (Lead compounds) பயன்படுத்துகின்றன. எனவே நுகர்வோர் இத்தகைய குழாய்களை வாங்குவதற்கு முன்னதாக, அவற்றிற்கு NSF போன்ற நிறுவனங்களின் சான்றிதழ்கள் உள்ளனவா என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும்.
Anton நிறுவனத்தின் குழாய்கள் நச்சுத்தன்மையற்ற, ஈயமற்ற நிலைப்படுத்திகளை (Stabilizers) பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஈய நச்சுத்தன்மையின் அபாயம் நீக்கப்படுகிறது. தரத்தில் எவ்வித குறைவும் இன்றி, நீடித்துழைக்கும் தன்மையை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பானது, 60 ஆண்டுகளுக்கும் மேலாக அது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இது குறித்து Anton நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லஹிரு ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், நுகர்வோர் மற்றும் சமூகங்களின் நலனிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், NSF ஈயமற்ற சான்றிதழைப் பெற்றமையானது, பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. சர்வதேச தரத்திலான மற்றும் நிலைபேறான தன்மை கொண்ட PVC தீர்வுகளை தொடர்ச்சியாக வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். என்றார்.
இந்தச் சான்றிதழானது வீட்டு உரிமையாளர்கள், கட்டுமானத் துறை சார்ந்த வல்லுநர்கள், வணிகப் பயன்பாட்டாளர்கள் Anton வர்த்தகநாமம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகின்றது. அத்துடன், நிறுவனத்தின் உற்பத்திச் செயன்முறைகளுக்கான ஒரு சுயாதீனமான அங்கீகாரமாகவும் இது அமைகிறது. இந்தச் சான்றிதழின் மூலம், பாதுகாப்பான கட்டுமானச் சூழலை ஏற்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறல் மற்றும் தலைமைத்துவத்தின் ஊடாக இத்தொழில்துறையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் Anton நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் அதிகரிக்கிறது.
Anton நிறுவனத்தின் குடிநீர் குழாய்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியன ஈயம், கட்மியம், இரசம் போன்ற பார உலோகங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் வினைல் குளோரைட் மொனோமர் (Vinyl chloride monomer) போன்ற பொருட்கள் உள்ளனவா என கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அது மாத்திரமன்றி, plasticizers மற்றும் ஏனைய சேதன மூலக்கூறுகள் தொடர்பிலும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. குழாய்களின் பாதுகாப்பு மற்றும் இணக்கத்தன்மையை உறுதி செய்வதற்காக நிறுவனத்தின் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திகளின் தயாரிப்புச் செயன்முறைகளும் NSF International நிறுவனத்தால் ஆய்வு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களால் நிறுவப்பட்ட St. Anthony’s Industries Group நிறுவனமானது, 1960கள் முதல் பிளாஸ்டிக் பதப்படுத்தலில் முன்னோடியாகத் திகழ்வதுடன், புத்தாக்கம் மற்றும் உற்பத்தியில் கொண்டுள்ள விசேடத்துவத்தின் பாரம்பரியத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பரந்த அளவிலான உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மற்றும் தொழில்துறையில் பல்வேறு முதன்மையான சாதனைகளை கொண்டுள்ள இக்குழுமமானது, நீண்ட கால நுகர்வோர் நம்பிக்கையை பெறும் வகையிலான மேம்பட்ட தீர்வுகளை வழங்குவதற்காக, தனது தயாரிப்பு வரிசையை தொடர்ச்சியாக விரிவுபடுத்தும் அதே வேளையில், தரம் தொடர்பான கடுமையான தரநிலைகளை அமைப்பதில் தொடர்ந்து முன்னணியில் திகழ்கின்றது. மேலதிக விபரங்கள் மற்றும் தயாரிப்புகள் பற்றி அறிந்து கொள்ள anton.lk எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.

