Jan 27, 2026 - 12:10 PM -
0
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. 9 சீசன்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து வருடமும் அவர் தான் host என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
பிக் பாஸ் 9 ஆம் சீசன் பல சர்ச்சைகளுக்கு நடுவே சமீபத்தில் நிறைவு அடைந்தது. அதில் பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் எல்லைமீறி நெருக்கம் காட்டியது, மற்றும் மற்ற போட்டியாளர்களை வம்பிழுத்தது எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.
மற்றொரு போட்டியாளரான சாண்ட்ராவை காரில் இருந்து தள்ளி தாக்கிய காரணத்திற்காக பார்வதி மற்றும் கம்ருதீன் என இருவருக்கும் ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
ரெட் கார்டு வாங்கிய பார்வதி பிக் பாஸ் 9 பைனலுக்கு வரமாட்டார் என ஷோ ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர் பைனலுக்கு வந்து விஜய் சேதுபதி முன் பேசினார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி பார்வதிக்கு வெப் சீரிஸ் வாய்ப்பு தனது ப்ரொடக்ஷன் மூலமாக தர போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதி தயாரித்து வரும் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் பார்வதி நடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

