Jan 27, 2026 - 12:33 PM -
0
பொதுக் காப்புறுதியின் சிறந்த விற்பனைக்கு உலகளாவிய முன்னுதாரணமாகத் திகழ்கிறது இலங்கையில் A+ Fitch தர மதிப்பீட்டைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு காப்புறுதி நிறுவனம் எனும் பெருமயைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பிரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம், பொதுக் காப்புறுதித் துறையில் சிறந்த விற்பனைகளை மேற்கொண்ட இலங்கையைச் சேர்ந்த சிறந்த 33 பேரையும், இந்தோனேசியாவைச் சேர்ந்த சிறந்த 10 பேரையும் கௌரவிக்கும் வகையில் 2வது General Insurance Pinnacle Achiever (GIPA) விருதுவழங்கும் நிகழ்வை இந்தோனேஷியாவில் நடத்தியது.
இந்தோனேஷியாவின் J.B. Boda நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வு, விற்பனை எண்ணிக்கைகளை மட்டும் அல்லாமல், நிலையான செயல்முறைகள், வாடிக்கையாளர் மையத்தன்மை மற்றும் தொழில்முறை கட்டுப்பாட்டை உள்ளடக்கிய பல்துறைச் சிறப்பைக் கொண்டாடும் வகையில் அமைந்தது.
பொதுக் காப்புறுதித் துறையின் விற்பனை நிபுணர்களின் சாதனைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதலாவது தளமாக GIPA காணப்படுகின்றது. இது ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பிரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. GIPA விருதுகளை வெளிநாட்டு வெற்றியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதன் ஊடாக தொழில்துறையில் சிறந்து விளங்குதல், முன்னேற்றம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பிரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்படுகின்றது.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் காப்புறுதித் துறையில் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பிரேஷன் நிறுவனம் துறையின் முன்னணியாளராக அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுக் காப்புறுதியில் விற்பனைச் சிறப்புக்களுக்கு உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் வழங்குவதில் காணப்படும் நீண்டகால குறைபாட்டை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பிரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் அடையாளம் கண்டிருந்தது.
ஆயுட் காப்புறுதியின், மில்லியன் டொலர் ஒன்றிணைவு ( Million Dollar Round Table- MDRT) மற்றும் ஆயுட் காப்புறுதி சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு சம்மேளனம் (Life Insurance Marketing and Research Association - LIMRA) போன்ற சர்வதேச அளவுகோல்களையும் உருவாக்கியுள்ளது. MDRT என்பது ஆயுட் காப்புறுதி மற்றும் நிதிச் சேவைத் துறையில் உயர்ந்த செயல்திறணைக் கொண்ட நிபுணர்களின் சிறப்பு, நெறிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய அமைப்பாகும். LIMRA என்பது, சர்வதேச ஆய்வுகள் மற்றும் தொழில்துறை அபிவிருத்தி நிறுவனம் என்பதுடன், இது இது தொழில்துறையில் அளவுகோல்களை உருவாக்குவதுடன், உலகளவில் 850 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு பயிற்சி, திறன் மற்றும் தரநிலைகளை வழங்குகிறது.
அதன்படி, SLICGL 2023 ஆம் ஆண்டில் GIPA விருதுகளை ஒரு கட்டமைக்கப்பட்ட அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பாகக் கருதியது. விற்பனை அளவு அங்கீகாரம், புதிய வணிகப் பங்களிப்பு, வணிகத் தொடர்ச்சி வெற்றி, ஆண்டு தோறும் வளர்ச்சி, வணிக நிலைத்தன்மை மற்றும் லாபகரத்தன்மை, மேலும் தேசிய அல்லது நிறுவன தரவரிசை ஆகிய ஆறு செயல்திறன் தூண்களை அடிப்படையாகக் கொண்டு, பொதுக் காப்புறுதியின் விற்பனையில் தொழில்முறைத் தன்மை, நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் மதிப்பிற்கான புதிய உலகளாவிய அளவுகோலை GIPA நிறுவுகிறது.
உலகளாவிய முதன்மை என்ற நிலைப்பாட்டிலேயே இந்த விருதுகளின் முக்கியத்துவம் அமைந்துள்ளது. சர்வதேச செயல்திறன் அளவுகோள்களுடன் ஒத்திசைவாக, சுயாதீனமான, தரநிலைப்படுத்தப்பட்ட மற்றும் தொழில்முறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மதிப்பீட்டை வழங்குவதே இவ்விருதுகளின் நோக்கமாகும். பல தசாப்தங்களாகத் துறையில் இருந்த குறைபாட்டை இவை நிவர்த்தி செய்து, பொதுக் காப்புறுதி விற்பனையை நிலைபெற்ற ஆயுட் காப்புறுதி தரநிலைகளுக்கு சமமாக கொண்டு வர முயல்கின்றன. விற்பனை நிபுணர்களுக்காக, GIPA சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு தொழில் முன்னேற்றப் பாதையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
GIPA படிப்படியாக தேசிய அளவிலான முயற்சியிலிருந்து சர்வதேச தளமாக பரிணமித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள பொதுக் காப்புறுதி நிபுணர்களிடையே அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கும், சந்தை தரங்களை மேம்படுத்துவதற்கும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் கட்டமைப்புகளில் இலங்கை போன்ற வளர்ந்து வரும் சந்தைகளை ஒரு தலைவராக நிறுவுவதற்கும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பிரேஷன் ஜெனரல் லிமிடெட் தொடர்ந்து பாடுபடுகிறது.

