Jan 27, 2026 - 12:39 PM -
0
JXG (ஜனசக்தி குழுமம்)இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், அதன் ஷில்பசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக தரம் 5 இற்கான புலமைப்பரிசில் கருத்தரங்குகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இதன் மூலம் ஜனசக்தி லைஃப், கல்விச் சிறப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட இந் நிகழ்ச்சித்திட்டம், 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைந்ததுடன் கல்வி ரீதியாகவும், ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் அவர்கள் சிறந்து விளங்க தேவையான மதிப்புமிக்க திறன்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கியது.
இந் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக, வள நபராகப் பணியாற்றிய புகழ்மிக்க கல்வியாளர் பாரத லங்காகே, மாதிரி வினாத்தாள்களை தயாரித்து கருத்தரங்குகளை நடாத்தினார். இதன் போது, தேர்வில் வெற்றி பெறச் செய்வதுடன் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கு உகந்த ஒரு நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தினார்.
மேலும், நவம்பர் 2025இல் குலுக்கல் சீட்டிழுப்பொன்று நடாத்தப்பட்ட்டு, tablets (Tabs)ஐ வெற்றி கொள்ளும் ஐந்து அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றியாளர்கள் வரும் வாரங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.
ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதம வணிக அதிகாரி நாமலி A. சில்வா கருத்து தெரிவிக்கையில், ஜனசக்தி ஷில்பசக்தி தரம் 5 புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம், உள்வாங்கப்பட்ட மற்றும் சம தரத்திலான கல்வியை இளம் வயதிலேயே வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் இளம் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதுமான கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது. அனைத்து சிறுவர்களிடையேயும் கற்றலுக்கான ஆர்வத்தை ஏற்படுத்தி, குறிப்பாக புலமைப்பரிசில் தேர்வு மட்டத்தில், பெற்றோரின் ஆதரவுடன் மாணவர்கள் முன்னேறத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். குலுக்கல் சீட்டிழுப்பின் வெற்றியாளர்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படுவார்கள். மேலும் அவர்களின் சாதனைகளைக் கொண்டாட நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். என்றார்.
ஷில்பசக்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் 2017இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து உற்சாகமான பங்கேற்பை பெற்று இத்திட்டம் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்துள்ளது. இந் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் திறமைகளை வளர்த்தல், கல்வியை ஊக்குவித்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கான தனது அர்ப்பணிப்பை ஜனசக்தி லைஃப் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஜனசக்தி லைஃப் பற்றி
1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

