Jan 27, 2026 - 01:01 PM -
0
இலங்கையிலும் அதற்கு அப்பாலும் ஒரு நிலைபெறுதகு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நீண்டகால அர்ப்பணிப்புடன், கொமர்ஷல் வங்கி தனது ஒன்றிணைந்து முன்னேறுவோம் (‘ForwardTogether’) எனும் எண்ணக்கருவிலான நிலைபெறுதகு பயணத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது. இதன் ஒரு அங்கமாக, ஒன்றிணைந்து முன்னேறுவோம் 2026: நிலைபெறுதகு பெருநிறுவன எதிர்காலத்திற்கான பங்குடைமை எனும் தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல் ஒன்றை வங்கி நடாத்தியது. நிலைபெறுதன்மை குறித்த கலந்துரையாடல்களை வாடிக்கையாளர்களுடன் இணைந்து நடைமுறைச் செயல்களாக மாற்றுவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
கொழும்பு, ஷங்கிரி-லா ஹோட்டலின் Lotus Ballroom இல் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநிறுவன மற்றும் தனிநபர் வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியின் சிரேஷ்டப் பிரதிநிதிகள், மற்றும் சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் (IFC) நிலைபெறுதன்மை நிபுணர்கள் ஒன்றுகூடினர்.
தொலைநோக்குப் பார்வையை செயலாக்கமாக மாற்றும் நோக்கத்துடன், வங்கியின் முக்கியமான தேசிய நிலைபெறுதன்மை உச்சிமாநாடு மூலம் உருவான ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டு,ஒன்றிணைந்து முன்னேறுவோம் 2026 நிகழ்வானது, வங்கியின் பரந்த ஒன்றிணைந்து முன்னேறுவோம் மேடையின் கீழ் ஒரு துணை முயற்சியாக உருவாக்கப்பட்டது. இதில், வாடிக்கையாளர் பங்குடைமை, திறன் அபிவிருத்தி, மற்றும் உச்சிமாநாடு நிகழ்வுகளுக்கிடையிலான காலப்பகுதிகளில் பெறுபேறுகளை நடைமுறைப்படுத்துதல் என்பவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அமர்வானது, நிலைபெறுதன்மை எவ்வாறு வர்த்தக போட்டித்திறன், முதலீட்டு முடிவுகள் மற்றும் நீண்டகால நிலைபெறு;தன்மையை மாற்றியமைத்து வருகிறது என்பதற்கான உலகளாவிய மற்றும் உளநாட்டு பார்வைகளை பகிர்ந்து கொள்ளும் உயர்மட்ட கலந்துரையாடலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாட்டு அமைப்புகள், சந்தைகள் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், மேலும் காலநிலை சார்ந்த கருத்துகள் பொருளாதார முடிவுகளை அதிகமாக பாதித்து வரும் சூழலில், வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையிலான பங்குடைமையின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இது வலியுறுத்தியது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் (IFC) சிரேஷ்ட துறைசார் நிபுணர் மற்றும் உலகளாவிய உற்பத்தித் தலைவரான திருமதி குயென் துக் நுயென் (Ms. Quyen Thuc Nguyen) அவர்கள் வழங்கிய காலநிலை மாற்ற அபாயங்களும் பசுமை முதலீட்டு வாய்ப்புகளும் என்ற தொழில்நுட்ப விளக்கவுரை இடம்பெற்றது. உலகளாவிய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அமர்வு, நிறுவனங்கள் அபாயங்களை குறைக்க, செயல்பாட்டு திறனை மேம்படுத்த, மற்றும் நிலைத்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க எவ்வாறு முடியும் என்பதற்கான நடைமுறை சார்ந்த பார்வைகளை வழங்கியது. இதன் மூலம், நீண்டகால மதிப்பு உருவாக்கத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மேலும், கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி அல்விஸ், மற்றும் IFC அமைப்பைச் சேர்ந்த திருமதி குயென் துக் நுயென் ஆகியோர் பங்கேற்ற குழு கலந்துரையாடலும் இடம்பெற்றது.
SLIIT யைச் சேர்ந்த கலாநிதி கயஷிகா பெர்னாண்டோ அவர்கள் நெறியாளராக செயல்பட்ட இந்த கலந்துரையாடலில், இலங்கையில் நிலைபெறுதகு பெருநிறுவன மாற்றத்தை விரைவுபடுத்துவதில் பங்குடைமைகள் ,புத்தாக்கங்கள் மற்றும் பொறுப்பான நிதியளிப்பு ஆகியவற்றின் பங்கு விரிவாக ஆராயப்பட்டது. மேலும், திட்டமிடல் மற்றும் அளவீடு என்பவற்றிலிருந்து நடைமுறைச் செயல்களுக்கும் கூட்டுப் பணியிலும் நகர வேண்டிய அவசியம் உள்ளதாக வலியுறுத்தப்பட்டது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

