Jan 27, 2026 - 01:03 PM -
0
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியானது பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் மங்காத்தா.
இப்படத்தை 15 ஆண்டுகள் கழித்து தற்போது ரீ ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த வாரம் வெளிவந்த மங்காத்தா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
புதிய திரைப்படத்திற்கு கிடைக்கும் அளவிற்கு ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படத்திற்கு வசூல் ஒவ்வொரு நாளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், நான்கு நாட்களில் இப்படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மங்காத்தா படம் ரீ ரிலீஸில் இதுவரை 17.5 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே 16 கோடி ரூபா வசூலித்துள்ளது. இதன்மூலம் ஓப்பனிங் வசூலில் ரீ ரிலீஸில் இதுவரை வெளிவந்த படங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் மங்காத்தா அடித்து நொறுக்கியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

