Jan 27, 2026 - 02:08 PM -
0
இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.

