Jan 27, 2026 - 03:08 PM -
0
கூர்மையான ஆயுதத்தால் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த குற்றச்செயல் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
கடந்த 2025.04.18 அன்று மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலஹேன பிரதேசத்தில் 34 வயதான பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் குற்றச்செயல் தொடர்பாக மத்துகம நீதவான் நீதிமன்றில் விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், இதில் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடி தலைமறைவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
சந்தேகநபரின் விபரங்கள்:
பெயர்: பிராமணகே தொன் சனத் ரவீந்திர நிலாந்த
முகவரி: இல. 78/01, இஹலகந்த, அகலவத்தை.
தேசிய அடையாள அட்டை இலக்கம்: 840321401V
சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்:
தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் - மத்துகம: 071 - 8591701
பொறுப்பதிகாரி (குற்றத் தடுப்பு பிரிவு) - மத்துகம: 071 - 8594381

