Jan 27, 2026 - 03:51 PM -
0
இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான கே.எல். ராகுல் திகழ்ந்து வருகிறார். ஒருநாள் போட்டிக்கான அணியில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறது. இவரிடம் கெவின் பீட்டர்சன் ஓய்வு குறித்து கேள்வி கேட்டார்.
அதற்கு கே.எல். ராகுல் அளித்த பதில் பின்வருமாறு,
நீங்கள் உங்களுக்கு நேர்மையாக இருந்தால், அது வரும்போது வந்தே தீரும். அங்கே இழுத்தடிப்பதில் எந்த பயனும் இல்லை. நிச்சயமாக, எனக்கு ஓய்வு குறித்து முடிவு எடுக்க இன்னும் சிறிது காலம் ஆகும். ஓய்வு குறித்து நான் யோசித்தேன். அது கடினமான முடிவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை உள்ளது.
நம் நாட்டில் கிரிக்கெட் தொடர்ந்து நடைபெறும். உலகிலும் கிரிக்கெட் தொடர்ந்து நடைபெறும். வாழ்க்கையில் இதைவிட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இந்த மனநிலை எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் என் முதல் குழந்தை பிறந்ததிலிருந்து, வாழ்க்கையை பார்க்கும் விதமே முற்றிலும் மாறிவிட்டது.
இவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
33 வயதாகும் கே.எல். ராகுல் 67 டெஸ்ட் போட்டிகளில் 4,053 ஓட்டங்களை பெற்றுள்ளார். சராசரி 35.8 ஆகும். 94 ஒருநாள் போட்டிகளில் 3,360 ஓட்டங்களை பெற்றுள்ளார். சராசரி 50.9 ஆகும். 72 டி20 போட்டிகளில் 2,265 ஓட்டங்களை பெற்றுள்ளார். சராசரி 37.75 ஆகும்.

