Header Logo

வணிகம்
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி அதன் பிரதம நிதி அதிகாரியாக இந்த்ரேஷ் புவிமானசிங்க பெர்னாண்டோ அவர்களை நியமித்துள்ளது

Jan 29, 2026 - 10:06 AM -

0

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி அதன் பிரதம நிதி அதிகாரியாக இந்த்ரேஷ் புவிமானசிங்க பெர்னாண்டோ அவர்களை நியமித்துள்ளது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்று அழைக்கப்பட்டதுமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, தனது பிரதம நிதி அதிகாரியாக இந்த்ரேஷ் புவிமானசிங்க பெர்னாண்டோ அவர்களை நியமித்துள்ளதாக பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. 

இந்த்ரேஷ் அவர்கள், நிதி, செயல்பாடுகள், விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் 33 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவமுள்ள சிரேஷ்ட நிர்வாகி ஆவார். அவரது தொழில்முறை வாழ்க்கையில், குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நிதிச் சேவைகள் துறைகளில், செயல்பாட்டுத் தலைமை, நிதி மூலோபாயம், வணிக திருப்புமுனை மற்றும் பாரிய அளவிலான நிறுவன மாற்றம் ஆகிய பிரிவுகளில் வலுவான சாதனைப் பதிவை கொண்டுள்ளார். 

2014 இல் Softlogic Holdings PLC உடன் இணைந்து கொண்ட அவர், பின்னர் Softlogic Finance PLC இன் பிரதம நடவடிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதன் போது அவர் செயல்பாட்டு கட்டமைப்புகள் மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தார். 2018 இல் ஆசிரி மருத்துவமனை குழுமத்தின் பிரதம செயல்முறை அதிகாரியாக (CPO) நியமிக்கப்பட்ட அவர், செயல்திறன், வாடிக்கையாளர் அனுபவம், கொள்முதல் மற்றும் குழுமத்தின் பெறத்தக்க கணக்குகள் தொகுப்பை நிர்வகித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் நிறுவன அளவிலான செயல்முறை மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார். Softlogic இல் இணைவதற்கு முன் இந்த்ரேஷ், Hemas குழுமத்தில் பிரிவு நிதிப் பணிப்பாளராகப் பணியாற்றினார். 

பன்முகப்படுத்தப்பட்ட பெருநிறுவன சூழல்களில் அவரின் ஆழ்ந்த அனுபவத்தை இது பிரதிபலிக்கின்றது. இந்த்ரேஷ் அவர்கள், UK (FCMA) இன் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் (CIMA) சக உறுப்பினராக உள்ளதோடு Chartered Global Management Accountant (CGMA) தகைமையையும் பெற்றவர். 

இந் நியமனம் குறித்து ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்து தெரிவிக்கையில், “ஜனசக்தி பைனான்ஸின் தலைமைத்துவக் குழுவிற்கு இந்த்ரேஷ் அவர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் செயல்பாட்டு அடித்தளங்களை உறுதிப்படுத்தி, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் இவ்வேளையில், ​​அவரது ஆழமான அனுபவம், வலுவான நிதியறிவு மற்றும் மாற்றத்திற்கான முயற்சிகளை வழிநடத்துவதில் நிரூபிக்கப்பட்ட திறன் என்பன மதிப்புமிக்கதாக இருக்கும். அவரது தலைமைத்துவமானது எங்கள் அனைத்து பங்குதாரர்களுக்கும் செயல்திறன், நிர்வாகம் மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்கத்தை மேம்படுத்துவதில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன். என்றார். 

இந்த்ரேஷ் புவிமானசிங்க பெர்னாண்டோவின் நியமனம், தலைமைத்துவக் குழுவை வலுப்படுத்துவதற்கான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இதன் வெளிப்பாடாக ஜனசக்தி பைனான்ஸ், நிறுவனத்தின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த, ஆழ்ந்த நிபுணத்துவம், மூலோபாய தெளிவு மற்றும் மாற்றத்தை நோக்கிய மனப்பாங்கை கொண்ட அனுபவம் வாய்ந்த தலைமைத்துவக் குழுவை கொண்டுள்ளது. 

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது) ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title