Jan 29, 2026 - 10:14 AM -
0
இலங்கையின் கிழக்குக் கரையின் அமைதியான அழகில், மறக்கமுடியாத ஒரு காதலர் தின விடுமுறையை Sun Siyam Pasikudah-இல் கொண்டாடுங்கள். Sun Siyam Resorts என்ற மேம்படுத்தப்பட்ட வர்த்தகநாமத்தின் கீழ், தனித்துவமான பிரத்தியேக தொகுப்பின் ஒரு பகுதியாக புதுமையாக மீள் உருவாக்கப்பட்ட இந்த சிறிய, சிறப்புரிமை பெற்ற இடமானது , இப்போது மேலும் சிறப்பு பெற்றுள்ளது. மனதைத் தொடும் ஆடம்பரமும் அர்த்தமுள்ள பயண அனுபவங்களும் தூண்டிய புதிய காலகட்டத்தை இந்த குழுமம் தொடங்கும் நிலையில், காதல், வடிவமைப்பு மற்றும் இயற்கை ஆகியவை சிறந்த இசைவுடன் இணையும் ஒரு மேம்பட்ட இலக்காக Sun Siyam Pasikudah திகழ்கிறது.
பாசிக்குடா வளைகுடாவின் அமைதியான, கண்ணாடிபோல் தெளிவான நீரோரத்தில் அமைந்துள்ள இந்த ரிசோர்ட் , தம்பதிகளுக்கும் பயணிகளுக்கும் நெருக்கமான, தனிப்பட்ட, மனதிற்கு ஆழ்ந்த ஓய்வை அளிக்கும் ஒரு பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்குகிறது.
இந்த காதலர் தினத்தில், விருந்தினர்கள் ஒன்றாக பகிரும் தருணங்களை மேலும் இனிமையாக்க கவனமாக வடிவமைக்கப்பட்ட Romantic Escape தொகுப்பை அனுபவிக்க அழைக்கப்படுகிறார்கள். அறை மேம்படுத்தல்களில் 50%விலைக்கழிவுடன் , ஆடம்பர அனுபவங்களுக்கான சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன; உணவு மற்றும் பானங்களில் 15% சேமிப்பும், தம்பதிகளுக்கான ஸ்பா அனுபவங்களில் 15% விலைக்கழிவும் இதில் அடங்கும். உயர்ந்த தரமான பவிலியன் தங்குமிடம், கடற்கரையில் மெழுகுவர்த்தி ஒளியில் அமைந்த இரவு உணவு, அல்லது இருவருக்காக வடிவமைக்கப்பட்ட அமைதியான ஸ்பா சிகிச்சை ஆகிய எந்த அனுபவமாக இருந்தாலும், ஒவ்வொரு தங்குதலுக்கும் இந்த சலுகைகள் மென்மையான ஆடம்பரத்தை சேர்க்கின்றன.
மேலும் நீண்டதும் சுகமானதுமான கடற்கரை விடுமுறையை நாடும் உள்ளூர் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்காக, பயண அனுபவத்தை மேலும் செழுமைப்படுத்தும் நுணுக்கமான நன்மைகளுடன் ஒரு சிறப்பு தங்குமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தது இரண்டு இரவுகள் தங்கும் நிலையில், வருகையின் போது கிடைப்பின் அடிப்படையில் இலவச அறை மேம்படுத்தலும், அனைத்து உணவு மற்றும் பானங்களிலும் 20% சேமிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் அவசரமற்ற காலை நேரங்கள், நீண்ட சூரிய அஸ்தமன இரவு உணவுகள், மற்றும் கடலோரத்தில் அமைதியான ஓய்வு தருணங்களை அனுபவிக்க ஊக்கமளிக்கப்படுகிறது.
மொத்தம் 34 பவிலியன்கள் மட்டுமே கொண்ட Sun Siyam Pasikudah, தனிச்சிறப்பு மற்றும் அமைதி நிறைந்த சூழலைப் பாதுகாத்து வருகிறது. ஒவ்வொரு பவிலியனும் நவீன அழகியலுடன் வடிவமைக்கப்பட்டு, சுற்றியுள்ள கடற்கரை இயற்கையை பிரதிபலிக்கும் வெப்பமான நிறங்களும் இயற்கைத் தன்மையுள்ள உருக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன. தனியுரிமை, பரந்த இடவசதி மற்றும் ஒய்வு ஆகியவை இங்கு அனுபவத்தின் அடையாளங்களாகத் திகழ்கின்றன; தங்கள் தனிப்பட்ட மாடியில் இருந்து சூரிய உதயத்தை ரசிப்பதோ, மாலையில் கடற்கரையோரம் நடைப்பயணம் செய்வதோ, அல்லது தீவு வாழ்க்கையின் மென்மையான தாளத்தில் சாந்தமாக ஓய்வெடுப்பதோ எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு தருணமும் மனநிறைவை அளிக்கிறது.
உணவு அனுபவம் காதல் பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். Beach Shack-இல் சுலபமான உஷ்ணமண்டல பானங்களிலிருந்து, Slice and Grill-இன் ரெட்ரோ ஊக்கமளிக்கும் சூழல் வரை, மேலும் நட்சத்திரங்களின் கீழ் அமைக்கப்படும் தனிப்பட்ட உணவு அனுபவங்கள் வரை, ஒவ்வொரு சமையல் தருணமும் இந்த இடத்தின் ஆடம்பரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரிசோர்ட்டின் ஸ்பா இந்த விடுமுறை உணர்வை மேலும் ஆழப்படுத்தி, சமநிலையை மீட்டெடுக்கும் சிகிச்சைகள் மூலம் இணைப்பு மற்றும் புதுப்பிப்பிற்கான இடத்தை உருவாக்குகிறது.
காதலைத் தாண்டி, பசிக்குடா வளைகுடாவின் அமைதியான நீர்பரப்புகள் நீச்சல், ஸ்நார்கலிங் மற்றும் நீர்விளையாட்டுகள் போன்ற மென்மையான சாகசங்களை ஆராய விருந்தினர்களை அழைக்கின்றன. அதே நேரத்தில், சுற்றியுள்ள இயற்கை அழகு, இருப்பை உணர்ந்து எளிமையை கொண்டாடும் மெதுவான வாழ்க்கைத் தாளத்தை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு அனுபவமும், உண்மைத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் எளிமையான நுட்பத்திற்கான Sun Siyam Pasikudah-இன் அர்ப்பணிப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் கவர்ச்சியை மேலும் உயர்த்தும் வகையில், விருந்தோம்பல் மற்றும் வடிவமைப்பில் சிறப்பிற்காக Sun Siyam Pasikudah தொடர்ந்து சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்று வருகிறது. இந்த ரிசோர்ட்ஆனது , Tripadvisor Travelers’ Choice Awards 2025-இல் உலகளாவிய அளவில் முன்னணி 10% ஹோட்டல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், Global Peace Hospitality Awards 2025-இல் Luxury Beachfront Retreat of the Year என்ற விருதையும் பெற்றுள்ளது. மேலும், அதன் தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் உள்துறை வடிவமைப்பிற்காக Homes and Gardens Design Awards-இலும் பாராட்டப்பட்டது. இந்த விருதுகள், காதல், நுட்பமான மேம்பாடு மற்றும் உலகத் தரச் சிறப்புகளை இடையறாது ஒருங்கிணைக்கும் ஒரு இலக்காக இந்த ரிசோர்ட் வளர்ச்சி பெற்றிருப்பதை பிரதிபலிக்கின்றன.
முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு, www.sunsiyam.com/sun-siyam- pasikudah/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது 065 205 5555 என்ற இலக்கத்தில் நேரடியாக ரிசோர்ட்டை தொடர்புகொள்ளவும்.
