Header Logo

சினிமா
ரஜினி, கமல் இணையும் படத்தின் இயக்குனர் இவரா?

Jan 29, 2026 - 06:46 PM -

0

ரஜினி, கமல் இணையும் படத்தின் இயக்குனர் இவரா?

தமிழ் சினிமாவின் சிரேஸ்ட நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக சொல்லியிருந்தனர். 

இருவரும் சினிமாவில் இளம் வயதில் நடித்த போது சில படங்களில் ஒன்றாக நடித்தனர். அதன்பின் தனித் தனியே கதாநாயகர்களாக மட்டுமே தொடர வேண்டும் என்று பேசி முடிவெடுத்து அதன்பின் 40 வருடங்களுக்கும் மேலாக இணைந்து நடிக்கவேயில்லை. 

அவர்கள் இணையும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே இருந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்று தெளிவுபடுத்திவிட்டார். 

தற்போது அந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பதைத் தேர்வு செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

'ஜெயிலர் 2' படத்தைத் தற்போது இயக்கி வரும் நெல்சன் தான் அந்த இயக்குனர் என்கிறார்கள். 

அவர் சொன்ன கதை ரஜினி, கமல் இருவருக்கும் பிடித்துவிட்டதாம். பட அறிவிப்புக்கான வீடியோ முன்னோட்டம் ஒன்றின் படப்பிடிப்பையும் பெப்ரவரி மாதம் படம் பிடிக்க வேலைகள் நடந்து வருகிறதாம். அறிவிப்பை வெளியிட்ட பின்பு ஒரு இடைவெளிக்குப் பிறகுதான் படத்தின் படப்பிடிப்பும் நடக்க உள்ளதாம். 

ஜெயிலர் 2' படத்தை முடித்த உடன் நெல்சன் இந்தப் படத்தை ஆரம்பிப்பாரா, அல்லது ஏற்கெனவே பேசி வைத்திருந்த தெலுங்குப் படம் ஒன்றை இயக்கி முடித்த பின் வருவாரா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title