Header Logo

சினிமா
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Jan 29, 2026 - 09:02 PM -

0

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015 - 2016-ம் கல்வியாண்டு முதல் 2021 - 2022-ம் ஆண்டு கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த விருதுகளை அடுத்த மாதம் 13-ம் திகதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

தமிழ்நாடு அரசின் சார்பில், சமுதாயச் சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், அதேபோன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்ககள் ஆகியோருக்குச் சின்னத்திரை விருதுகளும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் மாணவர்கள் தயாரிக்கும் சிறந்த குறும்படங்களுக்கு மாணவர் விருதுகளும் தொடர்ந்து வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. 

அதன் அடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.ராஜ்குமரர், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய்ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத் திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணிபோஜன், நீலிமாராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானாஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அழகி, ரோமாபுரி பாண்டியன், ராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title