Header Logo

சினிமா
விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Jan 30, 2026 - 09:48 AM -

0

 விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளிவந்திருக்க வேண்டும். இப்படத்தை திரையரங்கில் கொண்டாட விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததாலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு, படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்கவேண்டும் என உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் சென்சார் போர்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போனது. 

தலைமை நீதிபதி அமர்வில் இதற்கான விசாரணை நடந்தது. இதன்பின் கடந்த 27ஆம் திகதி வெளிவந்த உத்தரவில், ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்கவேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வதற்காக அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போய்விட்டது. 

இப்படி ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதினால், நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கை மீளப் பெற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், தணிக்கை குழு என்ன சொல்கிறார்களோ, அதன்படியே செய்து படத்தை வெளியிடப்போவதாக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வருகிற பிப்ரவரி 5ஆம் திகதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறாராம். அனைத்தும் கைகூடி வந்தால் ஜனநாயகன் படம் பிப்ரவரி 5ல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title