Header Logo

வடக்கு
அர்ச்சுனா மீதான அச்சுறுத்தல் வழக்கு ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Jan 30, 2026 - 10:08 AM -

0

அர்ச்சுனா மீதான அச்சுறுத்தல் வழக்கு ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (29) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

தொலைபேசியில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தார். 

குறித்த முறைப்பாடு வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராஜா தனகோபி, சிவரூபன் லகீந்தன் மற்றும் மனோகரன் பிரதீபன் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. 

குறித்த முறைப்பாட்டினை அடுத்து கடந்த மாதம் 26 ஆம் திகதி பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

அதனை அடுத்து சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (29) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது குற்றம்சாட்டப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title