Header Logo

வணிகம்
Travelco Holidays பிராந்தியத்தில் தன் பங்கினை வலுப்படுத்தி, கண்டியில் கிளையினை திறக்கிறது

Jan 30, 2026 - 11:30 AM -

0

Travelco Holidays பிராந்தியத்தில் தன் பங்கினை வலுப்படுத்தி, கண்டியில் கிளையினை திறக்கிறது

இலங்கையில் முழுமையான பயண தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகத் திகழும் Travelco Holidays மத்திய மாகாணத்திற்குள் தனது மூலோபாய விரிவாக்கத்தை குறிக்கும் வகையில், கண்டியில் தனது புதிய கிளையை திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. பேராதனை வீதியில் அமைந்துள்ள இந்த புதிய நிலையம், தலைநகரைத் தாண்டி உலகத் தரமுடைய பயண அனுபவங்களை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றும் நிறுவனத்தின் இலக்கில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. 

இந்த விரிவாக்கத்தின் மூலம், கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு Travelco நிறுவனத்தின் முழுமையான பயண சேவைகள் கிடைக்கவுள்ளன. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சர்வதேச சுற்றுலா தொகுப்புகள், விமான டிக்கெட் சேவைகள், விசா ஆலோசனை, தேனிலவு சுற்றுலா தொகுப்புகள், குடும்ப விடுமுறை பயணங்கள், நிறுவன ஊக்க சுற்றுலாக்கள் மற்றும் கல்வி பயண திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நிறுவனம் வழங்குகிறது. ஆரம்ப முன்பதிவிலிருந்து பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை பயணத்தின் முழு கட்டத்திலும் ஆதரவு வழங்கும் அதன் முழுமையான சேவை முறைமைக்காக Travelco பரவலாக அறியப்படுகிறது. 

இந்த விரிவாக்கத்துடன் இணைந்து, இலங்கையின் முன்னணி ஆண்கள் ஆடையியல் நிபுணரான ஹமீடியா நிறுவனத்துடன் Travelco ஒரு புதுமையான பங்குடைமையையும் தொடங்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பின் கீழ், உயர்தர வாழ்க்கைமுறை வர்த்தகநாமங்களையும் உலகளாவிய பயண அனுபவங்களையும் இணைக்கும் ஒரு சிறப்பு சீட்டிழுப்பு நடத்தப்படுகிறது. இது, பயணத்தை வெறும் பரிவர்த்தனைச் சேவையாக அல்லாமல், நவீன வாழ்க்கையின் அத்தியாவசிய கூறாகக் காணும் Travelcoவின் பார்வையை பிரதிபலிக்கிறது. 

“எமது நிறுவனத்தின் கிளையை கண்டியில் திறப்பதானது , மத்திய மாகாணம் முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த பயண ஆலோசனைகளை மேலும் நெருக்கமாக கொண்டு வருவதற்காகத்தான்,” என Travelco Holidays பணிப்பாளர் சான்ஃபர் ஷெரிப் தெரிவித்தார். 

“கொழும்பிற்கு வெளியேயுள்ள பயணிகளிடமிருந்து, அதே அளவிலான தனிப்பயனாக்கப்பட்ட சேவையும் தடையற்ற அனுபவங்களும் வேண்டுமென்ற வலுவான தேவையை நாம் உணந்துள்ளோம். இந்த விரிவாக்கம் மூலம், அனைவருக்கும் உலகத் தரமுடைய, எளிதான பயண அனுபவங்களை வழங்கும் எமது உறுதிமொழியை நிலைநிறுத்தியபடியே அவர்களுக்கு மேலும் சிறப்பாக சேவை செய்ய முடியும்.” மத்திய மாகாணத்தில் உள்ள பயணிகளிடமிருந்து அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இதுவரை சிறப்பு பயண ஆலோசனை சேவைகளுக்கான அணுகல் குறைந்திருந்த நிலையை கண்டி கிளை திறப்பு தீர்க்கிறது. இப்பகுதியில் இருப்பை உருவாக்குவதன் மூலம், Travelco தனது வர்த்தகநாமத்தை வரையறுத்து வரும் சிரமமற்ற சேவைத் தரநிலைகளைத் தக்கவைத்துக்கொண்டபடியே, விரிவான வாடிக்கையாளர் வட்டத்திற்கு தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவையும் நிபுணத்துவ வழிகாட்டுதலையும் வழங்க இலக்கிடுகிறது. 

மேலும், நிறுவனத்தின் இந்த விரிவாக்க மூலோபாயம், பயணத்தில் “மனித அம்சம் ” என அது குறிப்பிடும் கருத்திற்கான தனது அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது. பயண அனுபவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனிப்பட்ட கவனம் மற்றும் முழுமையான ஆதரவை வழங்குவதை இது வலியுறுத்துகிறது. புவியியல் விரிவாக்கங்களும் துறை கடந்த கூட்டாண்மைகளின் மூலம், அணுகல் தன்மை, நியாயமான கட்டணங்கள் மற்றும் நினைவில் நிற்கும் வாடிக்கையாளர் அனுபவங்களை முன்னுரிமையாகக் கொண்டு, இலங்கையின் போட்டி நிறைந்த பயண சேவை சந்தையில் Travelco தொடர்ந்து தனித்தன்மையை நிலைநிறுத்தி வருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title