Header Logo

வடக்கு
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும்!

Jan 30, 2026 - 01:44 PM -

0

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும்!

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசாங்கம் என்ற வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியை எந்த தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறோம். 

அந்த வகையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம். 

கடந்த அரசாங்கத்தில் குறித்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும் முழுமையான விமான நிலையமாக மாற்றம் பெறாத நிலையில் எமது அரசாங்கம் அதனை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. 

யாழ்ப்பாண விமான நிலையத்தின் விமான சேவைகளை விரிவு படுத்துவது தொடர்பில் விமான சேவைகள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்ற நிலையில் சேவைகளை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும். 

அதே போல் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி பணிகளை விரிவு படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வரும் அதே வேளை மயிலிட்டி துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக சுமார் 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டாலும் அதனுடைய அபிவிருத்தி பணிகளில் இடை நடுவில் விடப்பட்ட நிலையில் நாட்டினுடைய ஜனாதிபதியே அநுர குமார திசாநாயக்க அதனை மேற்கொள்வதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கி உள்ளார். 

அதேபோல யாழ். கொழும்புத் துறை இறங்கு துறை மற்றும் குறிக்காட்டுவான் துறை அபிவிருத்திகள் இந்த வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்படும். 

எது அரசாங்கம் நாட்டில் வாழுகின்ற சகல இன மத மக்களை இணைத்துக் கொண்டு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு அரசாங்கமாக ஆட்சிக்கு வந்தது யாவரும் அறிந்த விடயம். 

எமது அரசாங்கத்தின் பயணத்தை தடுத்த நிறுத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள் காரணம் கடந்த காலங்களைப் போல திருடர் யுகம் ஒன்றை மீண்டும் கொண்டு வருவதற்காக துடிக்கிறார்கள். 

இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவு பாதை இட்டுச் செல்வதற்கு இன்னும் சிலர் இனவாதத்தை கையில் எடுக்கிறார்கள் அது அவர்களின் அரசியல் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் இழந்து போன அரசியலை மீண்டும் புத்துயிர் படுத்துவதற்கே. 

ஆகவே வடக்கு மக்களுக்கு தெளிவாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் எமது அரசாங்கம் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் ஒரு அரசாங்கமாக செயல்படும் அதேவேளை அபிவிருத்தி பணிகளையும் தொடர்சியாக முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title