Header Logo

சினிமா
‘வேள்​பாரி’​யில் விக்​ரம், ரன்​வீர் சிங்?

Jan 31, 2026 - 02:03 PM -

0

‘வேள்​பாரி’​யில் விக்​ரம், ரன்​வீர் சிங்?

ஷங்​கர் இயக்​கத்​தில் வெளி​யான ‘இந்​தி​யன் 2’ படத்​தில் கமல்​ஹாசன், சித்​தார்த், பிரியா பவானி சங்​கர், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் நடித்​திருந்​தனர். 

இந்​தப் படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இதையடுத்து அவர் இயக்​கத்​தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்து வெளியான ‘கேம் சேஞ்​சர்’ படமும் வெற்றி பெற​வில்​லை. இந்​நிலை​யில் ‘இந்​தி​யன் 3’ படத்​தின் 70 சதவீத காட்​சிகள் முடிவடைந்​து​விட்ட நிலை​யில் அதன் படப்​பிடிப்பு தொடர​வில்​லை. 

இதற்கிடையே, சு.வெங்​கடேசன் எழு​திய ‘வேள்பாரி’ நாவலின் உரிமையை வாங்​கி​உள்ள ஷங்​கர், அதற்​கான திரைக்​கதையை ஏற்​கெனவே எழுதி வைத்​துள்​ளார். இப்​படத்தை 3 பாக​மாக இயக்க இருப்​ப​தாக தெரி​வித்​திருந்​தார். இப்​போது அதற்​கான வேலைகளை ஷங்​கர் தொடங்கி இருக்​கிறார். 

மும்​பையை சேர்ந்த பென் மீடியா நிறு​வனம் இப்​படத்​தைத் தயாரிக்க இருப்​ப​தாகக் கூறப்​படுகிறது. இந்​நிலை​யில் இப்​படத்​தில் விக்ரம், ரன்​வீர் சிங் இரு​வரும் நடிக்க இருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. 

‘அந்​நியன்’ படத்​தின் இந்தி ரீமேக்​கில் ரன்​வீர் சிங் நடிக்க இருந்​தார். அந்​தப் படம் தொடங்​கப்​பட​வில்​லை. இதற்​கிடையே அவர் இதில் நடிக்க அதிக வாய்ப்​பிருப்​ப​தாகக் கூறப்​படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title