Header Logo

வணிகம்
Mastercard, ‘Tap for Change’ பிரச்சாரத்தை ஆரம்பித்து சமூக ஆதரவால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய புற்றுநோய் பராமரிப்பு முயற்சியை வலுவூட்டுகின்றது

Feb 2, 2026 - 10:58 AM -

0

Mastercard, ‘Tap for Change’ பிரச்சாரத்தை ஆரம்பித்து சமூக ஆதரவால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய புற்றுநோய் பராமரிப்பு முயற்சியை வலுவூட்டுகின்றது

‘Doing Well by Doing Good’ என்ற தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் Mastercard இலங்கையில் Tap for Change பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இது அட்டை வாடிக்கையாளர்களின் அன்றாட டிஜிட்டல் கொடுப்பனவுகளை உயிர் காக்கும் அர்த்தமுள்ள செயலாக மாற்றும் முயற்சியாகும். 

இப் பிரச்சாரம், Colours of Courage Trust அமைப்புடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சமூகங்களை ஒன்றிணைக்கவும், பராமரிப்புக்கான அணுகலை விரிவுபடுத்தவும், அமைதி, நல்லிணக்கம் மற்றும் பகிரப்பட்ட மனிதநேயத்தை வளர்க்கவும் நிறுவப்பட்ட அமைப்பாகும். 

Mastercard, கராப்பிட்டியவில் 10 மாடிகளையும் 160 படுக்கை வசதிகளையும் கொண்ட Trail Cancer Hospitalஇன் கட்டுமானத்திற்காக $750,000இற்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்க உறுதியளித்துள்ளது. இம் மருத்துவமனை, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இரு தரப்பினருக்கும் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளை வழங்க உதவும். 

அதிநவீன நோயறிதல் முறைகள், என்பு மச்சை மாற்று சிகிச்சைப்பிரிவு, அறுவைச் சிகிச்சை அறைகள் மற்றும் முழுமையான தொடர்ச்சியான பராமரிப்பு ஆகியவற்றைக் கொண்ட இந்த மருத்துவமனை, இலங்கை முழுவதும் புற்றுநோயியல் சேவைகளுக்கான அணுகலை குறிப்பிடத்தக்களவு விரிவுபடுத்தி புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தும். 

Trail Cancer Hospital, புற்றுநோயாளர்களின் சிகிச்சைப் பலன்களை மேம்படுத்துவதிலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தேசத்திற்கு நம்பிக்கையை வழங்கும் அமைப்பாக உள்ளது. இந்த முயற்சி, சுகாதார அணுகல் முதல் கல்வி மற்றும் நிதி உள்ளடக்கம் வரை சமூகத் தாக்கத்தை மேம்படுத்துவதற்காக அதன் வலையமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கூட்டாண்மைகளைப் பயன்படுத்துவதில் Mastercard இன் சர்வதேச ரீதியாக நிரூபிக்கப்பட்ட சாதனையை அடிப்படையாகக் கொண்டது. 

அர்த்தமுள்ள முன்னேற்றத்தை ஏற்படுத்த இணைவு மற்றும் புதுமையின் மீதான Mastercardஇன் நம்பிக்கையை, Tap for Change பிரச்சாரம் மேலும் வலுப்படுத்துகிறது. Mastercard மூலம் செயற்படுத்தப்படும் தொடர்பற்ற (contactless) அட்டை மற்றும் e-commerce பரிவர்த்தனைகள் வழியாக, ஒவ்வொரு டிஜிட்டல் கொடுப்பனவையும் நாட்டின் சுகாதார நலனுக்கான அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்ற இந்த முயற்சி இலங்கை மக்களுக்கு வாய்ப்பளிக்கிறது. 

ஜனவரி 2026 முதல், இலங்கையில் Mastercard வரவட்டையை அல்லது கடனட்டையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தொடர்பற்ற பரிவர்த்தனையும் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு நேரடியாக பங்களிக்கும். Mastercard அட்டைகளை பயன்படுத்துவதன் மூலம் அட்டை வாடிக்கையாளர்கள், வணிகர்கள் மற்றும் பங்காளர்கள் இணைந்து போதிய வசதிகள் இல்லாத ஆயிரக்கணக்கான புற்றுநோயாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் புற்றுநோய் பராமரிப்பை மாற்றும் மருத்துவ வசதியை உருவாக்க உதவுவார்கள். 

Mastercardஇற்கான இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான நாட்டுப் பிரதிநிதி சந்துன் ஹபுகொட கருத்து தெரிவிக்கையில், அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க தொழில்நுட்பத்தின் சக்தியிலும் கூட்டுப்பணியின் வலிமையிலும் Mastercard எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளது. Tap for Change பிரச்சாரத்தின் ஊடாக இலங்கையில் உள்ள ஒவ்வொரு Mastercard அட்டை வாடிக்கையாளரும் அன்றாட கொள்வனவுகளுக்கு தங்கள் 

அட்டையை பயன்படுத்தும் போது முக்கிய தேசிய நோக்கத்திற்கு பங்களிக்க நாம் உதவுகிறோம். இதன் மூலம் ஒவ்வொரு தொடர்பற்ற பரிவர்த்தனையும் தயாள குணத்தின் பிரதிபலிப்பாக மாறும் - இது கராப்பிட்டியவில் Trail Cancer Hospitalஐ கட்டுவதற்கும் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை ஒவ்வொரு இலங்கையருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் எதிர்காலத்தை நோக்கி நம்மை நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கும் உதவும்.” என்றார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், Colours of Courage அறக்கட்டளையின் இணை நிறுவனருமான மஹேல ஜயவர்தன கூறுகையில், “ஒரு பெரிய நோக்கத்திற்காக ஒன்றுபடுவதன் சக்தியை இலங்கையர்கள் அறிவார்கள். Tap for Change பிரச்சாரம் நம் ஒவ்வொருவருக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. அட்டையின் ஒவ்வொரு பயன்பாடும் நீடித்த தாக்கத்துடன் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான படியாகும். Mastercard உடனான இந்த முயற்சியை ஆதரிப்பதில் நான் பெருமையடைகிறேன். ஏனெனில் ஒவ்வொரு சிறிய செயலும் ஆயிரக்கணக்கான இலங்கை குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் மேம்பட்ட சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையையும் உருவாக்க பங்களிக்கிறது. அனைத்து Mastercard அட்டை வாடிக்கையாளர்களையும் மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் அட்டைகளை பயன்படுத்துமாறு நான் ஊக்குவிக்கிறேன். என்றார். 

Mastercard (NYSE: MA) தொடர்பாக, www.mastercard.com 

Mastercard, உலகம் முழுவதும் 200இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து, மக்களுக்கு வலுச்சேர்க்கின்றது. எமது வாடிக்கையாளர்களுடன் இணைந்து அனைவரும் முன்னேறக்கூடிய ஒரு வலிமையான பொருளாதாரத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாகவும், எளிதானதாகவும், புத்திசாலித்தனமாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றும் பல்வேறு வகையான டிஜிட்டல் கொடுப்பனவுத் தெரிவுகளை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கள் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், கூட்டாண்மைகள் மற்றும் வலையமைப்புக்கள் ஆகியன ஒன்றிணைந்து மக்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் தங்கள் மிகப்பெரிய ஆற்றலை உணர உதவும் தனித்துவமான சேவைகளை வழங்குகின்றன. 

www.mastercard.com 

Colours of Courage Trust தொடர்பாக (www.coloursofcourage.org) 

The Colours of Courage Trust (COC) என்பது இலங்கையில் புற்றுநோய் பராமரிப்பு மற்றும் அது தொடர்பான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பாகும். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சமூகங்களை ஒன்றிணைக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் இலங்கையில் நிறுவப்பட்ட COCஇன் சிறப்பு முயற்சியான ‘Trail’, முக்கிய சுகாதார உட்கட்டமைப்பிற்கான நிதி திரட்டலுக்காக நாடு முழுவதும் ஒற்றுமையுடன் சமூகமாக நடக்க மில்லியன் கணக்கான இலங்கையர்களைத் திரட்டியது. இன்று இவ் அறக்கட்டளை, தனது பணிகளை தொடர்ந்து அதிநவீன வசதிகளை உருவாக்கி, நோயாளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் ஆதரித்து தரமான புற்றுநோய் சிகிச்சை அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும் வகையில் கூட்டுசெயல்பாட்டின் எண்ணத்தை ஊக்குவிக்கிறது. 

www.trailsl.com

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title