Header Logo

வணிகம்
செலான் வங்கி தைப்பொங்கல் கொண்டாட்டங்களுடன் 2026ஐ இனிதே வரவேற்றது

Feb 2, 2026 - 11:08 AM -

0

செலான் வங்கி தைப்பொங்கல் கொண்டாட்டங்களுடன் 2026ஐ இனிதே வரவேற்றது

அண்மையில் செலான் வங்கி வண்ணமயமான விழாவுடன் தைப்பொங்கலை செலான் தலைமையகத்தில் மகிழ்ச்சிகரமாக கொண்டாடியது. இந் நிகழ்வானது அன்புடன் அரவணைக்கும் வங்கியின் விழுமியங்களான பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தது. இக் கொண்டாட்டம், வங்கியின் கிளைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைத்ததுடன் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது. 

பிரதான கொண்டாட்டத்திற்கு மேலதிகமாக, வங்கியின் கிளை வலையமைப்பில் உள்ள கண்டி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் தைப்பொங்கலின் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் பிராந்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. இது அனைவரையும் உள்வாங்கிய பணியிடமாக செலானின் வர்த்தக நாமத்தை வலுப்படுத்தியது. 

இந் நிகழ்வில் தலைவர், நீதியரசர் புவனேக அலுவிஹாரே, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும், இது பன்முக கலாச்சார நிதி நிறுவனத்தின் புத்தாண்டுத் தொடக்கத்தைக் குறித்ததுடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான அதன் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இத் தைப்பொங்கல் கொண்டாட்டம் திறனை வெளிப்படுத்துவதிலும் வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றது. 

சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்படும் தைப்பொங்கல் ஒரு தமிழ் இந்து அறுவடைத் திருநாளாகும். நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஆசிகளை வேண்டி, விழாக்கள் வண்ணமயமாகவும் சுவையான பலகாரங்களுடனும் கொண்டாடப்பட்டன.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title