Header Logo

வணிகம்
அனைத்து வணிகத் துறைகளிலும் கணிசமான வளர்ச்சியுடன் 3 ம் காலாண்டில் மிகச் சிறந்த பெறுபேறுகளை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் பதிவாக்கியுள்ளது

Feb 2, 2026 - 11:26 AM -

0

அனைத்து வணிகத் துறைகளிலும் கணிசமான வளர்ச்சியுடன் 3 ம் காலாண்டில் மிகச் சிறந்த பெறுபேறுகளை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் பதிவாக்கியுள்ளது

எந்த சூழ்நிலைகளையும் வெற்றி கண்டு, செயல்பாட்டு ரீதியான வலுவாக இயங்கும் தனது ஆற்றலை எடுத்துக்காட்டும் வகையில். ஆனைத்து வணிகத் துறைகள் மத்தியிலும் ஈட்டப்பட்ட வளர்ச்சியுடன், 2025/26 நிதியாண்டின் 3 ம் காலாண்டில் சிறப்பான நிதிப் பெறுபேறுகளை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி பதிவாக்கியுள்ளது. வட்டி, வரி, தேய்மானம், மற்றும் கடன் தீர்வு ஆகியவற்றுக்கு முந்தைய குழும வருமானம் (EBITDA), இக்காலாண்டில் ரூபா 23.76 பில்லியன் தொகையாக அதிகரித்துள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ஈட்டப்பட்ட ரூபா 14.15 பில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில் 68% அதிகரிப்பாகும். 2025/26 நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் குழுமத்தின் திரட்டிய EBITDA வருமானம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 85% அதிகரிப்புடன், ரூபா 55.10 பில்லியன் தொகையை எட்டியுள்ளது. 

பொழுதுபோக்கு மற்றும் சில்லறை வர்த்தகத்துறைகள் முன்னிலை வகித்துள்ளதுடன், City of Dreams Sri Lanka மற்றும் Cinnamon Life ஆகியவற்றின் தொடர்ச்சியான தீவிரமான மற்றும் உத்வேகம் கொண்ட செயற்பாடுகளின் உந்துசக்தியுடன் பொழுதுபோக்குத் துறையின் EBITDA வருமானம் 337% என்ற பாரிய அதிகரிப்புடன் ரூபா 5.02 பில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளது (2024/25 நிதியாண்டின் 3 ம் காலாண்டு: ரூபா. 1.15 பில்லியன்). கீல்ஸ் சுப்பர்மார்க்கெட்டுக்களின் வலுவான செயல்திறன் மற்றும் புதிய எரிசக்தியால் இயங்கும் வாகனங்களின் வர்த்தகப் பிரிவான John Keells CG Auto (JKCG) நிறுவனத்தின் கணிசமான பங்களிப்பு ஆகியவற்றின் காரணமாக சில்லறை வர்த்தகத் துறை 166% என்ற அதிகரிப்புடன் ரூபா 7.72 பில்லியன் தொகையை EBITDA வருமானமாக பதிவாக்கியுள்ளது. 

போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை, கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் கொழும்பு துறைமுகத்திலுள்ள கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் (Colombo West International Terminal - CWIT) ஆகிய வணிகங்கள் மிகச் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதுடன், 24% EBITDA வருமான அதிகரிப்புடன், ரூபா 2.04 பில்லியன் தொகையைப் பங்களித்துள்ளன. நுகர்வோர் உணவுகள் துறையின் EBITDA வருமானம் 9% ஆல் அதிகரித்து, ரூபா 1.42 பில்லியனாகவும் பதிவாக்கப்பட்டுள்ளது. பான வகை வணிகத்தின் அளவு 17% ஆல் அதிகரித்துள்ளதுடன், சூறாவளியால் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் துறை அளவுகளில் சிறிய வளர்ச்சியை காண்பித்துள்ளது. 

குழுமத்தின் முதன்மையான ஒருங்கிணைந்த உல்லாச விடுதியாகத் திகழ்ந்து வரும் City of Dreams Sri Lanka, இக்காலாண்டில் முதல் முறையாக ரூபா 1.43 பில்லியன் நேர்மறை EBITDA வருமானத்தைப் பதிவாக்கி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளின் எண்ணிக்கை உத்வேகம் பெற்றுள்ளதால் ஹோட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. உணவு மற்றும் பான வகை, கசினோ வர்த்தகம் ஆகியன வருமான அதிகரிப்பிற்கு உதவி வருவதுடன், இக்காலாண்டில் குழுமத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்கு இவை பங்களித்துள்ளன. இந்த உல்லாசவிடுதியின் அனைத்து செயல்பாடுகளும் தற்போது இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் அவற்றின் செயல்திறன் இன்னும் மேம்படும் என JKH எதிர்பார்க்கிறது. 

நிதியியல் சேவைகள் துறை சவால்களைத் தாண்டி தொடர்ந்தும் முன்னேற்றம் கண்டு வருவதுடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கடன் துறையில் வலுவான வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளது. தனது bancassurance வலையமைப்பை விரிவுபடுத்துவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் கவனம் செலுத்தியுள்ளது. FairFirst Insurance நிறுவனத்தில் தான் கொண்டிருந்த பங்குகளின் விற்பனை உள்ளிட்ட மூலோபாயரீதியான பங்கு விற்பனை நடவடிக்கைகளை குழுமம் மேற்கொண்டது. 

எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், தனது வளர்ச்சி உத்வேகத்தை தொடர்ந்தும் நிலைபெறச் செய்வதில் குழுமம் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் உள்ளது. City of Dreams Sri Lanka மற்றும் கொழும்பு துறைமுகத்திலுள்ள மேற்கு கொள்கலன் முனையம் போன்ற பாரிய செயற்திட்டங்கள் தொடர்ந்தும் செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளதுடன், ஏற்கனவெ இலாபத்திற்கு நேர்மறை பங்களிப்பை வழங்கியுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title