Feb 3, 2026 - 06:36 PM -
0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (3) இடம்பெறுகின்றது.
இன்றைய போட்டி பல்லேகலையில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை அணி களமிறங்குகின்றது.

