Feb 3, 2026 - 10:31 PM -
0
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பல்லேகலையில் இன்று (3) இரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்து.
இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சேம் கரன் அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 129 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் Jacob Bethell நான்கு விக்கெட்டுக்களையும் Will Jacks மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி 3 க்கு 0 என்ற அடிப்படையில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

