செய்திகள்
வெளிநாட்டு உதவிகள் உரிய மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை

Feb 5, 2026 - 05:58 PM -

0

வெளிநாட்டு உதவிகள் உரிய மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை

வெளிநாட்டு அனர்த்த நிவாரணங்களை ஒருங்கிணைப்பதற்கான சிரேஷ்ட குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவின் தலைமையில் கூடியுள்ளது. 

 

வெளிநாட்டு நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பை மீளாய்வு செய்வதற்கும், தற்போது முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண வேலைத்திட்டங்களின் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்கும் தேவையான தீர்மானமிக்க நடவடிக்கைகளை எடுப்பதே இக்கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருந்தது. 

 

மிகவும் முறையான மற்றும் வெளிப்படைத்தன்மையான பொறிமுறையின் ஊடாக, குறித்த நிவாரண உதவிகளை உரிய மக்களுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பது குறித்து குழு உறுப்பினர்கள் விரிவாகக் கலந்துரையாடினர். 

 

இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வெளிநாட்டு நிவாரண உதவிகளின் பயன்பாட்டை உச்சமடையச் செய்வதற்குத்  தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்புடன் கூடிய நடவடிக்கைகள் அவசியம் எனச் சுட்டிக்காட்டினார். 

 

மேலதிகமாக, அனர்த்த நிவாரணங்கள் தொடர்பான தேவையான அனைத்து தரவு அறிக்கைகள் மற்றும் தகவல்களை எவ்விதத் தாமதமுமின்றி ஜனாதிபதி செயலகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு அவர் இக்குழுவிற்கு அறிவுறுத்தினார். 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05