Header Logo

வடக்கு
மன்னாரில் சாதனை இளைஞருக்கு உற்சாக வரவேற்பு!

Feb 6, 2026 - 12:51 PM -

0

மன்னாரில் சாதனை இளைஞருக்கு உற்சாக வரவேற்பு!


இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மன்னாரிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞரான மக்கின் முகமது அலி, தனது சக்கர நாற்காலிப் பயணத்தை இன்று (06) மன்னாரில் நிறைவு செய்தார். 

வவுனியா, சூடுவந்தகுளம் பகுதியைச் சேர்ந்தவரும், வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவருமான மக்கின் முகமது அலி, கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி காலை 8.45 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார். 

இலங்கை முழுவதிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகள் ஊடாக சுமார் 1,500 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் சக்கர நாற்காலியில் பயணித்த அவர், நேற்று (05) யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்த அவர், இன்று காலை 10 மணியளவில் மீண்டும் மன்னார் பஜார் பகுதியை வந்தடைந்தார். 

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை வழங்கிய பல்வேறு நாடுகளுக்கும், புலம்பெயர் உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், இக்கட்டான சூழலில் பேதமின்றி உதவிய இலங்கை மக்களின் ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இந்தப் பயணம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title