வணிகம்
பசுமைக் கடன்கள் மற்றும் லீசிங்கினை ஊக்குவிக்க கொமர்ஷல் வங்கி GAIA Greenenergy உடன் பங்குடைமை

Feb 6, 2026 - 02:38 PM -

0

  பசுமைக் கடன்கள் மற்றும் லீசிங்கினை ஊக்குவிக்க கொமர்ஷல் வங்கி GAIA Greenenergy உடன் பங்குடைமை

கொமர்ஷல் வங்கியானது நிலைபெறுதகு துறைக்கு தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், GAIA Greenenergy Holdings நிறுவனத்துடன் ஒரு மூலோபாய பங்குடைமையில் இணைந்துள்ளது. இதன் மூலம், வங்கியின் பசுமைக்கடன்கள் மற்றும் பசுமை லீசிங் வசதிகளுக்கான அணுகலை விரிவுபடுத்தி, தொழில் புரிபவர்கள் மற்றும் சுயதொழில் மேற்கொள்ளுபவர்கள் சூரிய சக்தியை ஏற்க மேலும் நியாயமான முறையிலான வழிமுறைகளை வழங்குகிறது. 

இந்த பங்குடைமையானது, கொமர்ஷல் வங்கியின் சில்லறை தயாரிப்புகள் துறை பிரதான முகாமையாளர் திரு. துஷ்மந்த ஜயசூரிய மற்றும் GAIA Greenenergy Holdings நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. லலிந்த களுபோவில ஆகியோர் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மூலம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. 

இந்தப் பங்குடைமையின் கீழ்,கொமர்ஷல் வங்கி சூரிய சக்திமுறைமைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுக்கு 10.00% முதல் தொடங்கும் சலுகை வட்டி வீதங்களை வழங்குகிறது. இதற்கான மீள்ச் செலுத்தும் காலம் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கியின் பசுமைக் கடன்கள் மற்றும் பசுமைக் குத்தகைகளை பயன்படுத்தி சூரிய சக்தித் தகடுகளை கொள்வனவு செய்யவும் பொருத்தவும் முடியும். தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பசுமை-நிதி விகிதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தச் சலுகை 2026 டிசம்பர் 2 வரை நடைமுறையில் இருக்கும். இதற்குத் துணையாக, GAIA நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பெறுமதி சேர்க்கும் வகையில் விரிவான சேவைகளை வழங்கும். இதில் சூரிய ஒளி மின்சார முறைமைகளின் உருவாக்கம், வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும். மேலும், 3 மறு முதல் தொடங்கும் சாதாரண சோலார் அமைப்புகள் முதல் கலப்பு மாதிரிகள் (Hybrid models) வரை பல்வேறு தெரிவுகள் வழங்கப்படுகின்றன. 

வாடிக்கையாளர்கள் ஓராண்டு இலவச சேவை மற்றும் ஓராண்டு காப்புறுதியைப் பெறுவார்கள். GAIA நிறுவனத்தால் நிறுவப்படும் சூரிய சக்தி முறைமைகள், அதன் தலைமையகத்தில் உள்ள மத்திய கட்டுப்பாட்டுப் பிரிவின் மூலம் நேரலையாகக் கண்காணிக்கப்படுகின்றன. இதன் மூலம், செயல்திறனில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் குழுக்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஆலோசனை வழங்க முடியும். GAIA நிறுவனம் சூரிய சக்தித் தகடுகளுக்கு 12 ஆண்டுகால உத்தரவாதத்தையும், இன்வெர்ட்டர்களுக்கு 10 ஆண்டுகால உத்தரவாதத்தையும், தகடுகளின் செயல்திறனுக்கு 30 ஆண்டுகால உத்தரவாதத்தையும் வழங்குகிறது. 

GAIA Greenenergy நிறுவனம், உலகின் முன்னணி ESG முதலீட்டாளர்களின் ஆதரவைப் பெற்ற, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம், ஏழு மாகாணங்களில் பரந்து விரிந்துள்ள ஒரு புதுமையான பொது-தனியார் பங்குடைமை மூலம் செயல்படுத்தப்படும் 350 MW திறன் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய கூரை-மேலான சூரிய சக்தி (Rooftop solar) திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. J VO சிறப்பு நோக்க அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் மீதானச் சார்பைக் குறைத்தல், தேசிய எரிசக்திச் செலவைக் குறைத்தல் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்பின் மீள்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் எரிசக்தி மாற்ற இலக்குகளுக்கு இந்த மாதிரியானது ஆதரவளிக்கிறது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05