Feb 6, 2026 - 02:44 PM -
0
JXG (ஜனசக்தி குழுமம்)இன் துணை நிறுவனமும், முன்னோடி முழு-சேவை முதலீட்டு நிறுவனமுமான First Capital Holdings PLC, நிதி சார்பாக வலுவூட்டப்பட்ட தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அதன் அர்ப்பணிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இவ் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இலங்கையின் இளம் சமுதாயத்திற்கு அத்தியாவசியமான முதலீட்டு அறிவு மற்றும் நடைமுறை நிதி திறன்களை வழங்குவதை நோக்காகக் கொண்டு Invest-ED என்னும் முயற்சியை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது 2024இல் தொடங்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட நிதி கல்வியறிவு முயற்சி ஆகும்.
கல்வி கற்றலுக்கும் நிஜ உலகில் நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட Invest-ED, அடுத்த தலைமுறையினரை நிதி சுதந்திரத்திற்கு தயார்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அவர்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும் எனும் தெளிவுபடுத்தலுடன் நின்று விடாது அவர்களின் தனிப்பட்ட இலக்குகள், இடர்களை எதிர்கொள்ளும் தன்மை மற்றும் நிதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எப்படி, எங்கே, எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது. Invest-ED, நிதிச் சுதந்திரம் தகவலறிந்து முடிவெடுப்பதில் இருந்து தொடங்குகிறது என்பதை அங்கீகரிக்கிறது. இம் முயற்சி, முதலீட்டு அடிப்படைகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிப்பதுடன் செல்வத்தை உருவாக்குவதில் ஆரம்பகால பங்கேற்பை ஊக்குவிக்கிறது. இது இடரை எதிர்கொள்ள நாட்டமற்ற நபர்கள், நீண்ட கால திட்டமிடுபவர்கள் அல்லது குறுகிய கால வாய்ப்பு தேடுபவர்கள் போன்ற பல்வேறு முதலீட்டாளர் பண்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சித்திட்டம் ஈடுபாட்டுடனான ஒரு மணி நேர பல்கலைக்கழக அடிப்படையிலான கருத்தரங்குகள் ஊடாக பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்றது. இந்த அமர்வுகள் First Capital நிதி முகாமையாளர்கள், பங்குச் சந்தை வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் உள்ளிட்ட தொழில்துறை வல்லுநர்களால் வழிநடத்தப்படுவதுடன் அவர்கள் மாணவர்களுடன் நேரடியாக ஈடுபட்டு அவர்களின் ஆர்வங்கள், விருப்பங்கள் மற்றும் பிரச்சனைகளை புரிந்துகொள்கிறார்கள். நடைமுறை உதாரணங்கள் மற்றும் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய மொழியை பயன்படுத்தி, வழங்குநர்கள் சிக்கலான முதலீட்டு கருத்துக்களை எளிமைப்படுத்துவதுடன் ஆரம்ப கால, தகவலறிந்த முதலீடு நீண்ட கால நிதி விளைவுகளை எவ்வாறு வடிவமைக்கும் என்பதனையும் விளக்கப்படுத்துகிறார்கள்.
2023இல் தொடங்கப்பட்ட Invest-ED, SLIIT, களனிப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பீடங்களில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டு 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்துள்ளது. இம் மாணவர்கள் அடிப்படை நிதி அறிவை பெற்றுக் கொண்டுள்ளதுடன் அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வழிநடத்தக் கூடியவர்களாக உள்ளனர்.
எதிர்காலத்தைப் பொறுத்தவரை First Capital, பல்கலைக்கழகங்களுடனான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் மூலமும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக பெருநிறுவனங்களுடன் இணைவதன் மூலமும் Invest-EDஐ நாடு தழுவிய அளவில் விரிவாக்க எண்ணியுள்ளது. இந்த முயற்சிகள் மூலம் நிறுவனம், இலங்கையின் இளைஞர்களிடையே நிதிக் கல்வியறிவை உயர்த்தவும் தகவலறிந்த, நம்பிக்கையான மற்றும் முதலீட்டிற்குத் தயாராக இருக்கும் தலைமுறையை உருவாக்கவும் முயல்கிறது.
Invest-ED போன்ற முன்முயற்சிகள் ஊடாக First Capital, நிதி தீர்வுகள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்தும் அதன் பரந்த நோக்கத்தை வலுப்படுத்துகிறது. கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நீண்டகால நிதி நல்வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் இந் நோக்கத்தை இளம் இலங்கையர்களுக்கு சென்றடைய வழிவகுக்கின்றது. தங்கள் நிறுவனத்திற்கு Invest-ED திட்டத்தை கொண்டு வர ஆர்வமாக உள்ள, பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் எவ்வாறு இணையலாம் என்பது தொடர்பாக தெரிந்து கொள்ள +94 11 2 651 651 அல்லது info@firstcapital.lk ஊடாக First Capital உடன் தொடர்பு கொள்ளவும்.
First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், பிரதான வணிகர், கூட்டாண்மை நிதி ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, செயலாற்றுகை முதலில் எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SLIM வர்த்தகநாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயர்ந்த கௌரவிப்பையும் First Capital பெற்றுள்ளது. First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC (துணை நிறுவனம்) ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகளை லங்கா கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட் (LRA), “A” யிலிருந்து “A+” ஆக மேம்படுத்தி, கண்ணோட்டம் Positive இல் இருந்து Stable ஆக மாற்றப்பட்டுள்ளது.

