Feb 6, 2026 - 02:52 PM -
0
GAC Automobile Technologies (Pvt) Ltd நிறுவனம், இலக்கம் 342, காலி வீதி, கொழும்பு 04 இல் தனது புதிய GAC City Showroom (நகர காட்சியறையை) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையின் மின்சாரமயமாகி வரும் போக்குவரத்துத் துறையின் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. நகரின் இதயப்பகுதியில் மூலோபாய ரீதியான இடத்தில் அமைந்துள்ள இந்த காட்சியறை, நவீன நகர்ப்புற வாழ்க்கைக்கு ஏற்ற மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான விரிவான மற்றும் அனுபவ ரீதியான அறிமுகத்தை வழங்குகிறது.
இந்தத் திறப்பு விழாவுடன் இணைந்ததாக, plug-in hybrid (PHEV) வகையைச் சேர்ந்த உயர்தர சொகுசு executive MPV வாகனமான GAC E9 மற்றும் தினசரி நகர்ப்புறப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய ரக முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ‘hatchback’ வடிவமைப்பிலான வாகனமான Aion UT ஆகிய இரண்டு புதிய வாகனங்கள் இலங்கைச் சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வெறுமனே சோதனை முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு, நிரூபிக்கப்பட்ட புத்தாக்கங்கள் மூலம் சொகுசான, நடைமுறை ரீதியான மற்றும் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற ஆகிய விடயங்களை ஒன்றிணைத்த மின்சார வாகனத் தீர்வுகளை வழங்க GAC கொண்டுள்ள அர்ப்பணிப்பை, இந்த புதிய காட்சியறையின் திறப்பு மற்றும் புதிய மாதிரிகளின் அறிமுகம் ஆகியன வெளிப்படுத்துகின்றன.
இது குறித்து, GAC Automobile Technologies (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் கதிரவேல் குகன் தெரிவிக்கையில், GAC City Showroom ஆனது, வெறுமனே ஒரு விற்பனை நிலையம் என்பதற்கு அப்பாற்பட்டதாகும். இது மின்சார வாகனப் பயன்பாட்டிற்கு இலங்கை தயாராக உள்ளது என்பதற்கான ஒரு சான்றாக விளங்குகின்றது. இலங்கையின் வாகன செலுத்துனர்களை உண்மையாக திருப்திப்படுத்தும் தயாரிப்புகளை வழங்குவதே எமது நோக்கமாகும். அதேவேளை அவர்கள் மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கு மாறுவதை எளிதானதாகவும், நம்பிக்கையானதாகவும் மாற்றுவோம். என்றார்.
இந்த அறிமுகத்தில் ஈர்க்கும் முக்கிய அம்சமாக GAC E9 வாகனம் அமைகிறது. இது நேர்த்தியான சொகுசுடன், நடைமுறை ரீதியான செயல்திறனை ஒன்றிணைக்கும் ஒரு உயர் ரக executive PHEV MPV ஆகும். 1,032 கி.மீ. வரையிலான பயண எல்லையை (driving range) கொண்டுள்ளதால், இது மின்சார வாகனப் பயன்பாட்டில் உள்ள முக்கிய தடையான பயண தூரம் குறித்த கவலையை தீர்க்கிறது. சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், குடும்பங்கள் மற்றும் நிறுவன பயன்பாட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த தெரிவாகும். மின்சார செயல்திறனை நீண்ட தூர பயணம் எனும் நம்பிக்கையுடன் இணைப்பதன் மூலம், நகரப் பயன்பாடு மற்றும் நீடிக்கப்பட்ட பயணம் ஆகிய இரண்டிற்கும் E9 சரியான தெரிவாக தன்னை எடுத்துக் காட்டுகிறது.
E9 வாகனத்திற்கு துணையாக அமையும் வகையில், நகர்ப்புற வாழ்க்கைக்கு ஏற்ற சிறிய மற்றும் கவர்ச்சிகரமான Aion UT எனும் hatchback வடிவமைப்புடனான முழுமையான மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சிக்கனமான விலை, நகர வாழ்க்கைக்கு ஏற்ற வடிவம் மற்றும் எளிதான பயன்பாடு ஆகியவற்றுடன், மின்சார வாகன உரிமையாளர் ஆவதற்கான ஒரு இலகுவான வாய்ப்பை வழங்குகிறது. இந்த காட்சியறையானது, நகர வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களை நேரில் பார்த்து அது பற்றிய முழுமையான அனுபவத்தை பெற முடியும். வழக்கமான வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வசதி, அனுபவம், நம்பிக்கை ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு மின்சார வாகனப் பயன்பாட்டை எளிதாக்குவதில் GAC நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
இலங்கையில் ஏற்கனவே Aion மின்சார வாகனங்கள் மிக வெற்றிகரமாக இயங்கி வருவதும், அவற்றுக்கான வலுவான விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் காணப்படுவதும் GAC இன் மின்சார வாகனக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துகிறது. ஒரு மின்சார வாகன விநியோகஸ்தர் எனும் வகையில், நம்பகத்தன்மை, வாடிக்கையாளர் நம்பிக்கை, நிலைபேறான போக்குவரத்து ஆகியவற்றில் நீண்டகால அர்ப்பணிப்பை இந்நிறுவனம் கொண்டுள்ளது. விரிவாக்கமடைந்து வரும் தமது வாகன மாதிரிகள், அனுபவம் வாய்ந்த விற்பனைச் சேவை, ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம், GAC Automobile Technologies நிறுவனம், இலங்கையின் மின்சார வாகன மாற்றத்திற்கான ஒரு நம்பகமான பங்காளராக தொடர்ச்சியாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.
கொழும்பு 04 இல் உள்ள GAC City Showroom இற்கு வருகை தந்து, போக்குவரத்துத் துறையின் நவீன எதிர்காலத்தை இப்போதே நேரில் வந்து கண்டறியுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

