செய்திகள்
ஒலுகலவின் இடத்திற்கு பதில் பணிப்பாளர் நியமனம்

Feb 6, 2026 - 06:33 PM -

0

ஒலுகலவின் இடத்திற்கு பதில் பணிப்பாளர் நியமனம்

வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.சி. ஆரியவங்ச நியமிக்கப்பட்டுள்ளார். 

உடல்நலக்குறைவு காரணமாக தற்போது கடமை விடுப்பில் இருக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை, அந்தப் பதவியின் பதில் கடமைகளை மேற்கொள்வதற்காக கே.சி. ஆரியவங்ச நியமிக்கப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.சி. ஆரியவங்ச தற்போது மத்திய குற்றத்தடுப்பு பணியகத்தின் (CCIB) பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05