Feb 6, 2026 - 10:32 PM -
0
ஐசிசி ஆண்களுக்கான 2026 டி20 உலகக் கிண்ணம் தொடர் தொழில்நுட்பக் குழு, இலங்கை அணியில் எஷான் மாலிங்கவிற்குப் பதிலாக பிரமோத் மதுஷானை இணைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
13 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 8 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மித வேகப்பந்து வீச்சாளரான மதுஷான், கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு டி-20 போட்டியின் போது எஷான் மாலிங்கவிற்கு ஏற்பட்ட தோள்பட்டை உபாதை காரணமாக குழாமில் மாற்றீடாகப் பெயரிடப்பட்டார்.
ஒரு வீரரை அதிகாரப்பூர்வமாக குழாமில் சேர்ப்பதற்கு முன்னர், அதற்குத் தொடர் தொழில்நுட்பக் குழுவின் அனுமதி அவசியமாகும்.
ஐசிசி ஆண்களுக்கான 2026 டி-20 உலகக் கிண்ணம் தொடர் தொழில்நுட்பக் குழுவில் வசீம் கான் ஐசிசி பொது முகாமையாளர் கிரிக்கெட், (ICC பிரதிநிதி) சக்சேனா (IBC பிரதிநிதி), ஹேமங் அமீன் (போட்டியை நடத்தும் நாட்டுப் பிரதிநிதி) மற்றும் ஷோன் பொலொக் (சுயாதீனப் பிரதிநிதி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

