Feb 7, 2026 - 04:47 PM -
0
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் (குழு C), ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரண்டன் கிங் 30 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாய் ஹோப் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மத்திய வரிசையில் களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மையர் ஸ்கொட்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார். அவர் வெறும் 36 பந்துகளில் 64 ஓட்டங்களை (6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) குவித்து அணியின் ஓட்டத்தை உயர்த்தினார்.
அவருக்கு ஆதரவாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 13 பந்துகளில் 26 ஓட்டங்களையும், ரோவ்மேன் பவல் 14 பந்துகளில் 24 ஓட்டங்களையும் எடுத்தனர்.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்து தரப்பில் பிராட் கியூரி 2 விக்கெட்டுகளையும், சபயான் ஷெரீப், மைக்கேல் லீஸ்க் மற்றும் ஓலிவர் டேவிட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஸ்கொட்லாந்து அணி 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

