Feb 7, 2026 - 07:52 PM -
0
சிங்கராஜ வன ஒதுக்குப்புறத்தில் மரை ஒன்றை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை பிணையில் விடுவிக்க எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, சந்தேகநபர்கள் இருவரையும் தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு எம்பிலிப்பிட்டிய பதில் நீதிவான் டி.எஸ்.பி. தசநாயக்க உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த இருவரும் நேற்று (06) கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

