Feb 7, 2026 - 09:00 PM -
0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'ஏ' பிரிவில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதி வருகின்றன.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா (0), இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் வெளியேறினர்.
அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் தனி ஒருவராகப் போராடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 49 பந்துகளில் 84 ஓட்டங்களை (10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினார்.
அமெரிக்க அணி தரப்பில் ஷாட்லி வான் ஸ்கல்க்விக் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்மீத் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்போது அமெரிக்க அணி 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸை ஆரம்பிக்கவுள்ளது.

