செய்திகள்
இங்கிலாந்திடம் போராடி தோற்றது நேபாளம்!

Feb 8, 2026 - 07:02 PM -

0

இங்கிலாந்திடம் போராடி தோற்றது நேபாளம்!

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரின் இன்றைய (8) நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இங்கிலாந்து அணி சார்பில் ஜேகொப் பெத்தெல் 55 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹரி புருக் 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

இந்நிலையில் 185 என்ற வெற்றியிலக்கை நோக்கி நேபாளம் அணி துடுப்பாடியது. 

விறுவிறுப்பாக அமைந்த இந்த போட்டியில் நேபாளம் அணி இறுதி வரை தமது வெற்றிக்காக போராடியிருந்தது. 

அந்த அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. 

இறுதி நேரத்தில் நேபாளம் அணி சார்பில் களம்புகுந்த லோகேஷ் பம் 20 பந்துகளில் 39 ஓட்டங்களை ஆட்டமிழக்காது அதிரடியாக விளாசினார். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் நேபாளம் அணியினால் இறுதி நேரத்தில் அந்த ஓட்ட எண்ணிக்கையை பெற முடியவில்லை.

Comments
0

MOST READ
01
02
03
04
05