Header Logo

வடக்கு
யாழில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் - இருவர் காயம்

Feb 8, 2026 - 08:33 PM -

0

யாழில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் - இருவர் காயம்

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் இரண்டு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். 

பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே இந்த மோதல் இடம்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஆதரவாக இரண்டு குழுக்கள் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதன்போது இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். 

ஏனையோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன 

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த மோதல் சம்பவமானது இளவாலை பொலிஸ் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title