Feb 9, 2026 - 06:45 AM -
0
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான வீசா, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB வங்கி) உடன் இணைந்து, இணையவழி (ஒன்லைன்) மற்றும் இணைய வழியில் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு உதவும் வீசாவின் திறந்த கொடுப்பனவுத் தளமான Cybersource ஆல் இயக்கப்படும், நேரடியாக டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் தீர்வான Card Present Connect (CPC) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வணிகங்களுக்கான வீசா ஏற்பு தீர்வுகள் (Visa Acceptance Solutions) மத்தியில், உலகளாவிய முன்னணி கொடுப்பனவு நுழைவாயில்களில் ஒன்றாகத் திகழும் Cybersource, சர்வதேச அட்டை திட்டங்களை உள்ளடக்கிய பாதுகாப்பான கொடுப்பனவு நடைமுறை செயலாக்கத்தை வழங்குகிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம், இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு நம்பகமான கொடுப்பனவுத் தீர்வை வீசா விரிவுபடுத்துகிறது. இது CPC வழியாக நேரடியாக அட்டை கொடுப்பனவுகளை மிகவும் திறன் மிக்க வழியிலும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள இடமளிக்கின்றது.
இலங்கையில் இந்த அறிமுகம் தெற்காசிய உலகில் வீசா அறிமுகப்படுத்தியுள்ள இத்தகைய முதன்முறையான செயல்படுத்தலைக் குறிக்கிறது. இப்புதிய தீர்வு, Android SmartPOS சாதனங்களைப் பயன்படுத்தி EMV chip தொழில்நுட்பம், தொடுகையின்றிய அட்டைப் பாவனை மற்றும் மொபைல் வோலட் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள வணிகங்களுக்கு இடமளிக்கிறது. இது வணிகர்கள் மத்தியில் செலவுகளைக் குறைத்து, விரைவாக இதனை உள்வாங்கிக் கொள்ளவும், மேம்பட்ட பாதுகாப்புக்கும் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான அணுகலுக்கும் இடமளித்து, வணிகங்கள் உலகளவில் போட்டியிடவும் பணப்பரிவர்த்தனையின்றிய பொருளாதாரங்களில் தமது பிரசன்னத்தை விரிவுபடுத்தவும் உதவுகிறது.
இதனை உள்வாங்கிக்கொள்ளும் வங்கிகளுக்கு, இந்த நடவடிக்கை செலவைக் கட்டுப்படுத்தி, விரைவான வழியில் சந்தையில் செயல்படும் திறன்கள் மற்றும் வீசாவின் முன்கூட்டியே ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டாளர் கட்டமைப்பு மூலம் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைப்படுத்தும் வசதியை வழங்குகிறது. முழுமையான இணக்கப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில், சிக்கலான உள்வாரியான கொடுப்பனவு உள்கட்டமைப்பை உருவாக்கி பராமரிக்க வேண்டிய சிரமத்தை இத்தீர்வானது உள்வாங்கும் வங்கிகளின் மத்தியில் போக்குகிறது.
வீசா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உள்நாட்டு முகாமையாளர் அவந்தி கொலம்பகே அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் வணிக சமூகத்தின் வளர்ச்சிப் பாதையை துரிதப்படுத்தக்கூடிய Cybersource மூலம் மற்றொரு திருப்புமுனை தீர்வை அறிமுகப்படுத்த NDB வங்கியுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களைப் பொறுத்தவரை, பாரம்பரிய POS முனையங்கள் செலவு மிக்கவையாக, சிக்கல் கொண்டதாக அல்லது நீண்ட கால ஒப்பந்தங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளவையாக இருக்கக்கூடும். இந்த நேரடி டிஜிட்டல் கொடுப்பனவு ஏற்பு தீர்வானது வணிகர்களை உள்வாங்குவதை ஒழுங்குபடுத்துதல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் வங்கிகளை உள்வாங்கிக் கொள்வதற்கான உள்கட்டமைப்பில் தங்கியிருக்க வேண்டிய நிலையைக் குறைத்தல் மூலம் அந்த இடைவெளியைக் குறைக்கிறது. NDB வங்கிக்கு இணையவழியிலிருந்து நேரடியாக ஏற்றுக்கொள்ளலுக்கு விரிவுபடுத்த உதவுவதன் மூலம், அட்டை ஏற்பை நாங்கள் அனைவரும் பயன்பெற வழிவகுக்கிறோம். மேலும் அனைத்து அளவிலான வணிகர்களுக்கும் அதிகரித்துச் செல்லும் போக்குடைய பணப்பரிவர்த்தனையின்றிய பொருளாதாரத்தில் செழிக்கத் தேவையான கருவிகள், தொழில்நுட்பம் மற்றும் நம்பிக்கைக்கு இடமளிக்கிறோம். இந்த ஒத்துழைப்பு இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் இந்த நிகழ்ச்சி நிரலை நன்கு நிலைநிறுத்தும் நிதிக் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் வீசா மற்றும் NDB வங்கி இடையிலான பகிரப்பட்ட நோக்கத்தை பிரதிபலிக்கிறது.”
NDB வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களுக்கான சிரேஷ்ட துணைத் தலைவர் சஞ்சய பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “உள்ளூர் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நடுத்தர சந்தை சார்ந்த தொழில் முயற்சிகளை ஆதரிப்பதில் எங்கள் நேரடி டிஜிட்டல் கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளல் குறித்த விரிவாக்கம் ஒரு முக்கியமான படியாகும். வீசாவின் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் NDB வங்கியின் வலுவான உள்ளூர் உறவுமுறைகளுடன், அடுத்த தலைமுறைக்குரிய கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளலை நாங்கள் வழங்குகிறோம். இது தங்குதடையற்ற, பாதுகாப்பான மற்றும் நிலையான வழியில் கிடைக்கப்பெறுகிறது. பரிவர்த்தனைகளை எளிதாக்கி, செயல்பாட்டு செலவுகளைக் குறைத்து மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் புத்தாக்கமான தீர்வுகளுடன் இந்த முயற்சி வணிகங்களை மேம்படுத்துகிறது. இது போன்ற ஒத்துழைப்புகள் மூலம், இலங்கையின் துடிப்பான வணிக சமூகத்தை நிதியியல் ரீதியாக உள்ளடக்குவதை முன்னெடுப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கும் எமது அர்ப்பணிப்பை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
வீசா மற்றும் NDB வங்கி இரண்டும் இணைந்து, அட்டை ஏற்றுக்கொள்ளலை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதன் மூலமும், வணிகர்களின் சுறுசுறுப்பாக தொழிற்பாடுகளை மேம்படுத்துவதன் மூலமும், நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான விரைவான, அனைவரையும் உள்ளடக்கிய அணுகலை செயல்படுத்துவதன் மூலமும் இலங்கையில் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வழிமுறையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன.
வீசா (Visa Inc.) குறித்த விபரங்கள்
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற Visa (NYSE: V), 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நுகர்வோர், வணிகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றுக்கிடையில் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு அனுசரணையளித்து வருகின்றது. தனிநபர்களும், வணிகங்களும், மற்றும் பொருளாதாரங்களும் வளம் காண்பதற்கு இடமளிக்கின்ற புத்தாக்கம்மிக்க, சௌகரியமான, நம்பகமான, மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவுகள் வலையமைப்பினூடாக உலகினை ஒன்றிணைப்பதே எமது நோக்கம். எங்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரங்கள், எங்கும் அனைவரையும் மேம்படுத்தும் என்றும், பண இயக்கத்தின் எதிர்காலத்திற்கு அணுகலை அத்திவாரமாகக் காண்பிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். மேலும் தகவல் விபரங்களுக்கு Visa.com.
NDB வங்கி குறித்த விபரங்கள்
இலங்கையில் பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள நான்காவது பெரிய வணிக வங்கியாக NDB வங்கி திகழ்ந்து வருகின்றது. 2025 ம் ஆண்டுக்கான Euromoney Awards for Excellence விருதுகளில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாக NDB பெயரிடப்பட்டது, மேலும் 2025 ம் ஆண்டுக்கான Asian Banking & Finance Retail Banking Awards விருதுகளில், ஆண்டின் மிகச் சிறந்த உள்நாட்டு தனிநபர் வங்கிச்சேவை வங்கி - இலங்கை மற்றும் ஆண்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கிச்சேவை முயற்சி - இலங்கை ஆகிய விருதுகளையும் வென்றுள்ளது. NDB குழுமத்தின் தாய் நிறுவனமான NDB, மூலதனச் சந்தை சார்ந்த துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளதுடன், தனித்துவமான வங்கிச்சேவை மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுமத்தை உருவாக்குவதற்கு அவை இடமளித்துள்ளன. டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளால் இயக்கப்படும் அர்த்தமுள்ள நிதியியல் மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதில் வங்கி உறுதிபூண்டுள்ளது.

